இலங்கை

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு அழுத்தம்!

  • October 29, 2025
  • 0 Comments

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழியை விரைவில் நிறைவேற்றுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். “பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும். அதுவரையில் தடுப்புக் காவல் உத்தரவைப் பெறுவதும் நிறுத்தப்பட வேண்டும். கடந்தகாலங்களில் அரசியல் பழிவாங்கலுக்கே அந்த ஏற்பாடு பயன்படுத்தப்பட்டுள்ளது. தடுப்புக் காவலால்தான் […]

இலங்கை

இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு முடிவு கட்டுமாறு கோரிக்கை

  • October 29, 2025
  • 0 Comments

மாகாண சபைகளுக்கு அதிகாரப் பகிர்வு அவசியம். அச் சபைகளை மக்கள் பிரதிநிதிகளே ஆள வேண்டும். எனவே, உடனடியாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா வலியுறுத்தினார். பதுளையில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு, “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்பது நாட்டு மக்களின் கோரிக்கையாகும். பல வருடங்களாக இக்கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. எனவே, அடுத்த ஜனாதிபதித் தேர்தல் பற்றி […]

ஐரோப்பா

லண்டனில் கண் பார்வை இழந்த பலருக்கு மீண்டும் கண் பார்வை! வைத்தியர்களின் சாதனை

  • October 29, 2025
  • 0 Comments

பிரித்தானியாவின் லண்டனில் கண் பார்வை இல்லாதவர்கள் மேற்கொண்ட சிகிச்சையின் மூலம் மீண்டும் கண் பார்வை கிடைத்துள்ளமை மருத்துவ உலகின் புரட்சியாக கருதப்படுகிறது. வயதானவர்களுக்கு ஏற்படும் விழித்திரைச் சிதைவு (Age-related Macular Degeneration – AMD) நோயால் பார்வையை இழந்தவர்களுக்கு, கண்களின் பின்புறத்தில் நுண்சில்லு (Microchip) பொருத்தப்பட்டு அவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைத்துள்ளது. இந்த புரட்சிகரமான வெற்றியால் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த முறையின் கீழ் சிகிச்சை வழங்கி கண்பார்வையை வழங்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த […]

உலகம் முக்கிய செய்திகள்

உலக சந்தையில் தங்க விலையில் ஏற்பட்ட மாற்றம் – நிபுணர்கள் வெளியிட்டுள்ள தகவல்

  • October 29, 2025
  • 0 Comments

உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சாதகமான நிலைப்பாடு காரணமாக தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா – சீனாவுக்கு இடையிலான வர்த்தக போரில் சாதகமான இணக்கப்பாடு எட்டப்பட்ட நிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் பாரிய அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. சீனாவுக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் அதிகரித்த வரியை அறிமுகம் செய்யவுள்ளதாக வெளியான அறிவிப்பை அடுத்து இந்த மாற்றம் ஏற்பட்டிருந்தது. இவ்வாறான […]

செய்தி

இன்று விசாரணைக்கு வரும் ரணிலுக்கு எதிரான வழக்கு

  • October 29, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி, கடந்த ஓகஸ்ட் 22 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார். கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர அவர்களின் உத்தரவின் பேரில், அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அத்துடன், அது தொடர்பான வழக்கு ஓகஸ்ட் 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதித் தரப்பினரால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைக் […]

உலகம் செய்தி

மூன்றாவது முறையாகவும் அமெரிக்க ஜனாதிபதியாகும் கனவில் ட்ரம்ப்

  • October 29, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் மீண்டும் ஜனாதிபதியாக தான் போட்டியிடுவதற்கு விரும்புவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையின் முன்னாள் மூலோபாய ஆலோசகர் ஸ்டீவ் பானனின், ‘அரசியலமைப்புக்கு முரணாக மூன்றாவது முறையாகப் போட்டியிட வேண்டும்’ என்ற சமீபத்திய பரிந்துரை குறித்து, “ஏர் ஃபோர்ஸ் வன்” விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது ஊடகங்கள் அவரிடம் கேள்வி எழுப்பின. கேள்விக்குப் பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “அதைச் […]

இலங்கை செய்தி

இலங்கை பாடசாலை மாணவர்களைப் பாதுகாக்க பிரதி காவல்துறை மா அதிபர் நடவடிக்கை

  • October 29, 2025
  • 0 Comments

இலங்கையில் பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக களுத்துறை பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் ஜயந்த பத்மினி வீரசூரிய தெரிவித்துள்ளார். பாடசாலை முடிந்த பின்னர் மாணவர்கள், யாருடன் பழகுகிறார்கள்?, எங்கு குழுவாக நிற்கிறார்கள் என்று ஆராய்வதற்கு சிவில் உடையில் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதற்கமைய, நிலையங்கள், பாடசாலை விட்டுச் செல்லும்போது பேருந்து, வியாபாரத் தளங்கள் போன்ற இடங்களில் போதைப்பொருள் பாவனைப் போன்ற சம்பவங்களைக் […]

உலகம் செய்தி

(UPDATED) போர் நிறுத்தத்திற்கு மத்தியில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 9 பேர் மரணம்

  • October 28, 2025
  • 0 Comments

UPDATE பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் உத்தரவை அடுத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. ——————————————————————————————– போரினால் பாதிக்கப்பட்ட பகுதியின் மீது மீண்டும் தாக்குதல் நடத்துமாறு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) உத்தரவிட்டதை அடுத்து, இஸ்ரேலிய இராணுவம் வடக்கு மற்றும் தெற்கு காசாவில் நடத்திய தாக்குதல்களில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். காசா நகரத்தின் சப்ரா(Sabra) பகுதியில் நான்கு பாலஸ்தீனியர்களும், கான் யூனிஸ்(Khan Younis) பகுதியில் ஐந்து பாலஸ்தீனியர்களும் உயிரிழந்துள்ளனர். பாலஸ்தீன பிரதேசத்தில் போராளிக் […]

உலகம் செய்தி

பிரேசிலில் காவல்துறையினர் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு – பலர் உயிரிழப்பு

  • October 28, 2025
  • 0 Comments

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில்(Rio de Janeiro) நடந்த சட்ட அமலாக்க நடவடிக்கையில் நான்கு காவல்துறை அதிகாரிகள் உட்பட குறைந்தது 60 பேர் உயிரிழந்துள்ளதாக பிரேசிலிய செய்தி நிறுவனமான G1 தெரிவித்துள்ளது. ரியோ டி ஜெனிரோவின் புறநகரில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளான அலெமாவோ(Alemao), பென்ஹா ஃபவேலா(Penha favelas) பகுதிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வன்முறை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான ஆபரேஷன் கன்டெய்ன்மென்ட்(Operation […]

இலங்கை செய்தி

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உதவிய பெண் வழக்கறிஞர் ஒருவர் கைது

  • October 28, 2025
  • 0 Comments

பாதாள உலகக் குழுத் தலைவர் சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் ‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை மறைத்து வைக்க இஷார செவ்வந்திக்கு தண்டனைச் சட்ட புத்தகத்தின் நகலை வழங்கியதாகக் கூறப்படும் கடவத்தை(Kadawatha) பகுதியைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிப்ரவரி 19 அன்று அளுத்கடே நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வேடமணிந்த ஒருவரால் “கணேமுல்ல சஞ்சீவ” என்று அழைக்கப்படும் பிரபல கும்பல் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த இஷார செவ்வந்தி உட்பட […]

error: Content is protected !!