இந்தியா செய்தி

கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கும் நடிகர் விஜய்

  • October 26, 2025
  • 0 Comments

கடந்த மாதம் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்(Tamilaga Vetri Kalagam) தலைவருமான விஜய் நாளை மாமல்லபுரத்தில்(Mamallapuram) உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் சந்திக்க திட்டமிட்டுள்ளார். கரூர் மற்றும் சில மாவட்டங்களைச் சேர்ந்த குடும்பங்கள், தமிழக வெற்றிக் கழகம் ஏற்பாடு செய்த சிறப்பு பேருந்துகள் மூலம் சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு அழைத்து வரப்பட உள்ளனர். “இது ஒரு தனிப்பட்ட நிகழ்வாக இருக்கும், ஊடகங்களுக்கு அனுமதி இல்லை. விஜய் ஒவ்வொரு குடும்பத்தையும் […]

உலகம் செய்தி

அமைச்சரவையில் இரண்டு இளைஞர்களுக்கு பதவி வழங்கிய நேபாளத்தின் இடைக்கால பிரதமர்

  • October 26, 2025
  • 0 Comments

இளைஞர்கள் தலைமையிலான எழுச்சியைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட நேபாளத்தின் இடைக்கால அரசாங்கம் இரண்டு இளைஞர்களுக்கு தனது அமைச்சரவையில் பதவி வழங்கியுள்ளது. முன்னாள் சுகாதாரச் செயலாளரான சுதா கௌதம் சுகாதாரம் மற்றும் மக்கள்தொகை அமைச்சராகவும், சமூக ஆர்வலரான பப்லு குப்தா(Bablu Gupta) இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் நேபாளத்தில் நடைபெற்ற மிகப்பெரிய ஆட்சி கவிழ்ப்பிற்கு முக்கிய அங்கத்தவர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில், இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடந்த ஒரு விழாவில் ஜனாதிபதி ராம் சந்திர பவுடல்(Ram Chandra […]

செய்தி விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை – இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

  • October 26, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்தவகையில், விசாகப்பட்டினம்(Visakhapatnam) மைதானத்தில் நடைபெற்ற 27வது போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. நாணய சுழற்சியை வென்று நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது. அந்தவகையில், முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 38.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 168 ஓட்டங்களை பெற்றது. நியூசிலாந்து அணி சார்பில் ஜார்ஜியா பிலிம்மர்(Georgia Filmer) 43 ஓட்டங்களும் அமெலியா கீர்(Amelia […]

உலகம்

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் ட்ரம்ப் – நிறைவுக்கு வரும் வர்த்தக போர்!

  • October 26, 2025
  • 0 Comments

தெற்காசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ட்ரம்ப், சீனாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என அமெரிக்க கருவூல செயலாளர் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தில் டிக்டொக்கின் (TikTok) அமெரிக்க செயல்பாடுகள், சீனாவின் அரிய மண் தாதுக்கள் மீதான கட்டுப்பாடுகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டு ஒப்பந்தம் ஒன்று எட்டப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அரங்கில் இவ்விரு நாடுகளின் மோதல் பாரிய பொருளாதார பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் இந்த சாதகமான முடிவு எட்டப்பட்டுள்ளது. டிரம்ப் மற்றும் சீன அதிபர் […]

உலகம் செய்தி

08 மாதங்களில் 08 போர்களை நிறுத்தினேன் – ட்ரம்ப் பெருமிதம்!

  • October 26, 2025
  • 0 Comments

தனது நிர்வாகம் 08 மாதங்களில் 08 போர்களை நிறுத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே விரிவாக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை மேற்பார்வையிட இன்று  மலேசியாவுக்கு விஜயம் செய்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அங்கு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், எனது நிர்வாகம் எட்டு மாதங்களில் முடிவுக்குக் கொண்டு வந்த எட்டு போர்களில் இதுவும் ஒன்று. நாங்கள் சராசரியாக ஒரு மாதத்திற்கு ஒன்று […]

இலங்கை

இலங்கையில் குழந்தைகள் ஸ்மார்ட்போன் (smartphones ) பயன்படுத்த தடை!

  • October 26, 2025
  • 0 Comments

இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட  குழந்தைகள் ஸ்மார்ட்போன் (smartphones ) பயன்படுத்துவதைத் தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக குழந்தைகள் நல அமைச்சர் சரோஜா பால்ராஜ் தெரிவித்தார். மாணவர்கள் கலந்து கொண்ட ஒரு விழாவில் பேசிய அமைச்சர், இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மொபைல் போன்களை வைத்திருக்கவோ அல்லது பயன்படுத்தவோ அனுமதிக்கப்படுவதை அரசாங்கம் தடை செய்யும் என உறுதியளித்துள்ளார.

இலங்கை

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது

  • October 26, 2025
  • 0 Comments

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். மஹரகம – நாவின்ன பகுதியில் வைத்து காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உலகம்

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து

  • October 26, 2025
  • 0 Comments

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர். தாய்லாந்து மற்றும் கம்போடியப் பிரதமர்கள் இன்றைய தினம் (26) மலேசியாவில் வைத்து குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள்(CNN) செய்தி வெளியிட்டுள்ளன. பல மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கொடிய எல்லை மோதல்களைத் தொடர்ந்து கையெழுத்திடப்பட்ட ஒரு போர் நிறுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான சமாதான முன்னெடுப்புகளின் மத்தியஸ்தராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இந்த நிகழ்வில் […]

உலகம் செய்தி

உக்ரைனில் (Ukraine) மழலையர் பாடசாலையை தாக்கிய ரஷ்யா – 48 குழந்தைகளை மீட்ட வீரர்!

  • October 26, 2025
  • 0 Comments

உக்ரைனின் (Ukraine) கீவ் நகரில் உள்ள மழலையர் பாடசாலையில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் இருந்து 48 குழந்தைகளை காப்பாற்றிய ஒருவர் பற்றிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உக்ரைனின் சிவில் பாதுகாப்பு சேவையின் மேஜர் ஜெனரல் ஒருவர் எரியும் கட்டடத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பாக மீட்கும் காட்சி கெமராவில் பதிவாகியுள்ளது. ஒலெக்சாண்டர் வோலோபுவேவ் (Oleksandr Volobuev) என்ற நபர் குறித்த குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டுள்ளார். ரஷ்யாவின் சமீபத்திய இந்த தாக்குதல் அதன் கோர முகத்தை […]

ஆசியா

வடமேற்கு பாகிஸ்தானில் இராணுவ நடவடிக்கைகளின் போது 5 வீரர்கள்,25 பயங்கரவாதிகள் பலி

  • October 26, 2025
  • 0 Comments

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இரு தனித்தனி இராணுவ நடவடிக்கைகளில் ஐந்து வீரர்கள் மற்றும் 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இராணுவம் இன்று(26) தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் இராணுவத்தின் ஊடகப் பிரிவான இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) ஒரு அறிக்கையில், வடக்கு வசிரிஸ்தான்(Waziristan) மற்றும் குர்ரம்(Kurram) மாவட்டங்களில் உள்ள பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லை வழியாக ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் திறம்பட செயல்பட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் வடக்கு வசிரிஸ்தானில், நான்கு தற்கொலை குண்டுதாரிகள் உட்பட 15 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக […]

error: Content is protected !!