இலங்கையில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை
இலங்கையில் டொலர் கையிருப்பு அதிகரித்துள்ள நிலையில், வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திடம் இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்தார். மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதி அமைச்சிடம் வாகன இறக்குமதி குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை வாகன இறக்குமதிக்கு அனுமதி கிடைக்கவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார். வாகன இறக்குமதிக்கான தடை இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் […]













