பொழுதுபோக்கு

“கும்கி – 2” பட ரிலீசுக்கு அதிரடியாக தடை விதிப்பு

  • November 12, 2025
  • 0 Comments

பிரபுசாலமன் இயக்கத்தில் 2012ல் வெளியாகி பெரிய ஹிட் ஆன படம் கும்கி. அதன் இரண்டாம் பாகத்தை தற்போது பிரபு சாலமன் இயக்கி நவம்பர் 14ம் திகதி ரிலீஜூக்கு தயாராக உள்ளது. ஆனால் தற்போது நீதிமன்றம் கும்கி பட ரிலீசுக்கு அதிரடியாக தடை விதித்து இருக்கிறது. 2018ல் கும்கி 2 படத்தை தயாரிக்க 1 கோடி 50 லட்சம் ரூபாயை சந்திரபிரகாஷ் ஜெயின் என்பவரிடம் பிரபு சாலமன் கடனாக வாங்கி இருக்கிறார். அந்த தொகையை படத்தின் ரிலீசுக்கு முன்பு […]

பொழுதுபோக்கு

அஜித் – அம்பானி கூட்டணி… தல முயற்சிக்கு அடித்த ஜாக்பாட்

  • November 12, 2025
  • 0 Comments

இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனம் (Reliance Consumer Products) நடிகர் அஜித் குமாரின் கார் பந்தயக் குழுவுடன் இணைந்துள்ளது. இதன்மூலம், இந்த நிறுவனத்தின் முதன்மை புத்துணர்ச்சி பானமான கேம்பா எனர்ஜி(Campa Energy), அஜித்குமார் கார் பந்தய அணியின் அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னராக செயல்படவுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை ஊக்குவிப்பது ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் முக்கிய கொள்கைகளில் ஒன்று என்றும், இதன் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் […]

உலகம் செய்தி

ரஷ்ய பாணியிலான LGBTQ எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்றிய கஜகஸ்தான் பாராளுமன்றம்

  • November 12, 2025
  • 0 Comments

கஜகஸ்தான்(Kazakhstan) நாடாளுமன்றம் பொது இடங்கள் மற்றும் ஊடகங்களில் LGBT பிரச்சாரத்தை தடை செய்யும் மசோதாவை நிறைவேற்றியுள்ளது. நாடாளுமன்றத்தின் கீழ் சபையால் நிறைவேற்றப்பட்ட சட்டப்படி, முதல் குற்றத்திற்கு சுமார் $230 (£175) அபராதம் விதிக்கப்படும். ரஷ்யா(Russia), ஜார்ஜியா(Georgia) மற்றும் ஹங்கேரியில்(Hungary) நிறைவேற்றப்பட்ட சட்டங்களை ஒத்த இந்த சட்டம், கஜகஸ்தான் செனட்டிற்கு அனுப்பப்படும், அங்கு அது நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சட்டம் குழந்தையின் உரிமைகள், ஊடகங்கள், ஆன்லைன் தளங்கள், விளம்பரம், தகவல் தொடர்பு, கலாச்சாரம் மற்றும் கல்வி தொடர்பான […]

இலங்கை

டிப்பர் லொறியுடன் நேருக்கு நேர் மோதிய பேருந்து – மூவரின் நிலை கவலைக்கிடம்!

  • November 12, 2025
  • 0 Comments

அம்பலாந்தோட்டை கிவுல பகுதியில் இன்று  பேருந்தும் டிப்பர் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிப்பர் லொறியின் ஓட்டுநரும் படுகாயம் அடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாத்தறையிலிருந்து மஹகல்வெவ நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும், ஹம்பாந்தோட்டையிலிருந்து தங்காலை நோக்கிச் சென்ற டிப்பர் லொறியும் விபத்தில் சிக்கியுள்ளன. விபத்து நடந்த பகுதி மிகவும் வளைவுகள் கொண்ட சாலை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். […]

உலகம் செய்தி

அணுசக்தி கொள்கையை மாற்றுமா ஜப்பான் – புதிய பிரதமரிடம் இருந்து வந்த சாதகமான தகவல்!

  • November 12, 2025
  • 0 Comments

ஜப்பானின் புதிய பிரதமர் சானே தகைச்சி (Sanae Takaichi) நாட்டின் பழைமையான அணுசக்தி அல்லாத கொள்கைகளில் சாத்தியமான மாற்றத்தை கொண்டுவர முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய மாற்றங்கள்  அத்தகைய ஆயுதங்கள் நாட்டிற்கு கொண்டுவருவதற்கான தடைகளை திருத்த முயற்சிக்கலாம் என்ற ஊகத்தை ஏற்படுத்தியுள்ளது. அணு ஆயுதங்களை வைத்திருக்கவோ, உற்பத்தி செய்யவோ அல்லது அதன் எல்லைக்குள் அறிமுகப்படுத்தவோ கூடாது என்ற மூன்று கொள்கைகள்  ஜப்பானில் காலம் காலமாக பின்பற்றப்படுகிறது. அந்த மூன்று கொள்கைகளும்  ஜப்பானின் பாதுகாப்பு உத்தியின் வரவிருக்கும் திருத்தத்தில் பராமரிக்கப்படுமா […]

விளையாட்டு

பாகிஸ்தான் தற்கொலைக்குண்டு தாக்குதல் – நாடு திரும்பும் இலங்கை அணி!

  • November 12, 2025
  • 0 Comments

இஸ்லாமாபாத்தில் நேற்று நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலை தொடர்ந்து  பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் 16 இலங்கை வீரர்கள் நாடு திரும்ப முடிவு செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் விளைவாக பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஒரு தற்கொலை குண்டுதாரி வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.  அத்துடன் பலர் காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் ஓட்டுநர் தேர்வில் களமிறக்கப்படும் இராணுவம்!

  • November 12, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் ஓட்டுநர் தேர்வு நிலுவைகளை நிவர்த்தி செய்வதற்கு ஏதுவாக புதிய நடவடிக்கைகளைச் செயல்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. இதற்கமைய பாதுகாப்பு அமைச்சகத்தைச் சேர்ந்த 36 இராணுவ ஓட்டுநர் தேர்வாளர்கள் இந்த விடயத்தில் உதவி செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓட்டுநர் தேர்வுகளை விரைந்து நடத்தி முடிக்க முடியும் எனவும்   அதிக தேவை உள்ள இடங்களில் அடுத்த ஆண்டு மேலும் 6,500 சோதனைகள் கிடைக்கும் என்று போக்குவரத்துத் துறை (DfT) தெரிவித்துள்ளது. பாதுகாப்புத் துறையின் சிவிலியன் பணியாளர்களைக் கொண்ட […]

ஐரோப்பா

ஜார்ஜியா விமான விபத்து – கருப்புப் பெட்டி மீட்பு!

  • November 12, 2025
  • 0 Comments

ஜார்ஜியாவில் விபத்துக்குள்ளான துருக்கிய இராணுவ விமானத்தின் கருப்பு பெட்டி கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். புதிய தகவல்களின் படி 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் யார் என்பது இனங்காணப்படவில்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அஜர்பைஜானில் இருந்து புறப்பட்ட சரக்கு விமானமானது, ஜார்ஜியாவின் எல்லையைக் கடந்த சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 20 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புலனாய்வாளர்கள் விமானத்தின் கருப்புப் பெட்டியைக் கண்டுபிடித்துள்ளதாகவும், விபத்துக்கான காரணம் என்ன என்பதை […]

இந்தியா செய்தி

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

  • November 12, 2025
  • 0 Comments

மும்பையிலிருந்து வாரணாசிக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக  செய்தி வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த விமானம் இன்று வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில்  தரையிறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணித்த 176 பயணிகள்  மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் விமானம் முழு பாதுகாப்பு ஆய்வுக்காக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு மாற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். கட்டாய சோதனைகள் முடிந்ததும் விமானம் சேவைக்குத் திரும்பும் என்று அதிகாரிகள் […]

பொழுதுபோக்கு

“ஜெய்லர் 2” மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்பும் நடிகை

  • November 12, 2025
  • 0 Comments

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் பிரபல நடிகை ஒருவர் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். ஜெய்லர் முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், ரித்விக், யோகி பாபு, VTV கணேஷ் ஆகியோர் ஜெய்லர் 2 இலும் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், முதல் பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த, மோகன் லால் மற்றும் சிவராஜ் குமார் ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களை தவிர ‘ஜெயிலர் 2’ படத்தில் வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் இணைந்துள்ளதாக […]

error: Content is protected !!