மலேசியாவில் பெண் ஒருவருக்கு அதிர்ச்சி கொடுத்த இன்ஸ்டாகிராம் கும்பல் – பெருந்தொகை பணம் மோசடி
மலேசியாவில் சூட்சுமமான மோசடியில் சிக்கிய பெண் ஒருவர் 291,000 ரிங்கிட்டை இழந்துள்ளார். ஜொகூர் பகுதியில் பகுதிநேரமாக வேலை செய்து மேலதிக வருமானத்தைப் பெற முயன்ற 56 வயதான பெண்ணே இவ்வாறு பணத்தை இழந்துள்ளார். குறித்த பெண் சமூக வலைத்தளங்களில் பகுதிநேர வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரம் ஒன்றைக் கண்டுள்ளார். இதனையடுத்து, இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் டெலிகிராம் (Telegram) மூலம் பணியாற்றுமாறு கும்பல் ஒன்றினால் பணிக்கப்பட்டுள்ளார். புகைப்படங்கள் தொடர்பான மதிப்பீடுகளை வழங்குவதே அந்தப் பெண்ணுக்குக் கொடுக்கப்பட்ட பணியாகும். பணியை ஆரம்பிப்பதற்கு […]












