பொழுதுபோக்கு

பிரபல நடிகை அதிதி ராவ் விடுத்துள்ள எச்சரிக்கை

  • November 16, 2025
  • 0 Comments

பிரபல நடிகை அதிதி ராவ் தனது பெயரை பயன்படுத்தி இடம்பெறும் மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இதில் வாட்சப்பில் ஒரு நபர் போட்டோகிராபர்களை தொடர்பு கொண்டு போட்டோஷூட் பற்றி பேசுவதாக தெரிவித்துள்ளார். தனது டீம் மூலமாவே தான் அனைத்தையும் செய்வதாகவும், தனிப்பட்ட இலக்கத்தை இதற்காக பயன்படுத்துவது இல்லை எனவும் அதிதி விளக்கம் கொடுத்து இருக்கிறார். அது நான் இல்லை, அந்த நம்பரிடம் எச்சரிக்கையாக இருங்கள் என அதிதி இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார்.

செய்தி

வெனிசுலாவில் சிறை வைக்கப்பட்டிருந்த பிரெஞ்சு நபர் விடுதலை!

  • November 16, 2025
  • 0 Comments

வெனிசுலாவில் (Venezuela) கடந்த நான்கு மாதங்களாக சிறையில் வைக்கப்பட்டிருந்த கமிலோ காஸ்ட்ரோ (Camilo Castro) விடுதலை செய்யப்படவுள்ளதாக பிரான்ஸ் இன்று அறிவித்தது. இது தொடர்பில் X தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பரோட் (Jean-Noel Barrot),  காஸ்ட்ரோவை சிறையில் இருந்து விடுவித்ததற்கு பிரெஞ்சு இராஜதந்திரிகளை பாராட்டினார். அத்துடன் காஸ்ட்ரோ விமானம் மூலம் மீண்டும் பிரான்ஸிற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். 41 வயது யோகா ஆசிரியரான காஸ்ட்ரோ கடந்த ஜூன் மாதம் அண்டை […]

உலகம் செய்தி

புதிய குடியேற்றக் கொள்கையை தயாரிக்கும் ட்ரம்ப் நிர்வாகம்!

  • November 16, 2025
  • 0 Comments

அமெரிக்க நிர்வாகம் ஒரு புதிய குடியேற்றக் கொள்கையைத் தயாரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த மாற்றம் பயணத் தடையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு கிரீன் கார்ட்  மற்றும் பிற அந்தஸ்து சலுகைகளை கடுமையாகக் கட்டுப்படுத்தக்கூடும். கடந்த ஜூன் மாதம், ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள 12 நாடுகள் மீதான பயணத் தடையில் ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்திட்டார். இதற்கமைய ஆப்கானிஸ்தான், சாட் (Chad), காங்கோ குடியரசு (Republic of Congo), ஈக்குவடோரியல் கினியா (Equatorial Guinea), […]

உலகம் செய்தி

லிபியாவில் விபத்துக்குள்ளான இரு படகுகள் – நால்வர் உயிரிழப்பு!

  • November 16, 2025
  • 0 Comments

லிபியாவில் குடியேறிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள்  விபத்துக்குள்ளானதில், குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இந்த விபத்து கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தலைநகர் திரிப்போலியில் (Tripoli) இருந்து கிழக்கே சுமார் 118 கி.மீ தொலைவில் உள்ள கடலோர நகரமான அல் கும்ஸுக்கு (Al Khums) அப்பால்  நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த படகில் வங்கதேசத்தை சேர்ந்த 26 குடியேறிகள் பயணித்ததாகவும் மற்றொரு படகில் இரண்டு எகிப்தியர்கள் மற்றும் சூடானியர்கள் உட்பட 69 பேர் […]

ஐரோப்பா செய்தி

அயர்லாந்தில் விபத்துக்குள்ளான கார் – 05 பேர் உயிரிழப்பு!

  • November 16, 2025
  • 0 Comments

அயர்லாந்தில் (Ireland) கோ லௌத்தில் (Co Louth) இடம்பெற்ற கார் விபத்தில் 05 பேர் உயிரிழந்துள்ளனர். டண்டல்க் (Dundalk), கிப்ஸ்டவுனில் (Gibstown) உள்ள L3168 வீதியில் நேற்று இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாகவும், மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும்  அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.    

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவின் வரவு செலவு திட்டம் – வருமான வரி உயர்வு சாத்தியமா?

  • November 16, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் வரவிருக்கும் வரவு செலவு திட்டத்தில் வருமான வரியை அதிகரிக்கும் திட்டங்களை அதிபர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) கைவிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு பதிலாக லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் அதிக மதிப்புள்ள சொத்துக்கள் மீது புதிய வரியை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. வருமான வரி வரம்புகள் மீதான முடக்கத்தை 2030 வரை கூடுதலாக இரண்டு ஆண்டுகளுக்கு அதிபர் நீட்டிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நடவடிக்கையால் ஆண்டுதோறும் சுமார் £8 பில்லியன் வருமானம் […]

இலங்கை

கிண்ணியாவில் ஆணொருவரின் சடலம் மீட்பு!!

  • November 16, 2025
  • 0 Comments

கிண்ணியா_ தோனா முருகன் கோயிலுக்கு அருகாமையில் உள்ள கடை ஒன்றிற்கு முன்னால் ஆணொருவரின் சடலமொன்று இன்று (16) கிண்ணியா காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் ஏறாவூரை சேர்ந்த 55 மதிக்கத்தக்கவருடையது என கிண்ணியா  காவல்துறையினர் தெரிவித்தனர். கிண்ணியா தோனாவில் கடலூர் முருகன் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான கடையொன்றிற்கு முன்னால் சடலம் மீட்கப்பட்டது. சிகப்பு நிற சட்டையும், சாம்பல் நிற கருப்பு கோடு போட்ட சாரமும் அணிந்திருந்தார் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். அருகில் கால் […]

இலங்கை

நுகேகொடை பேரணிக்கு ஆள் சேர்க்கும் நாமல் – அரசாங்கத்திற்கு எதிரானவர்களுக்கு அழைப்பு!

  • November 16, 2025
  • 0 Comments

தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதிகளையும் தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனவே, அரசாங்கத்திற்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் 21 ஆம் திகதி நுகேகொடைக்கு வந்து   தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “இன்று, விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் […]

கருத்து & பகுப்பாய்வு

விஜய்–ராகுல் கூட்டணி – தமிழக அரசியலில் அதிர்ச்சியை கிளப்பும் புதிய வியூகம்!

  • November 16, 2025
  • 0 Comments

தமிழக அரசியலில் பரபரப்பான புதிய திருப்பம் என்றே சொல்ல வேண்டும். நடிகர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு வெற்றிக் கழகம் விரைவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போகிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக நிர்வாகிகள் சிலரை காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் விரைவில் ராகுல் காந்தியையும் நேரில் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நவம்பர் மாதத்தின் இறுதி வாரம் இந்த முக்கிய சந்திப்பு நடைபெறும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கூட்டணி பற்றிய விஜயின் விருப்பம் தவெக கட்சி ஆரம்பித்த நாளிலிருந்தே […]

பொழுதுபோக்கு

40 நாட்களுக்கு திவாகர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

  • November 16, 2025
  • 0 Comments

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 ஆரம்பிக்கப்பட்டு சுமார் 40 நாட்கள் கடந்துள்ள நிலையில், தற்போதுதான் போட்டி சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த ஷோவில் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் நடத்தப்பட்டு போட்டியாளர்கள் குறைக்கப்பட்ட போதும், திடீரென 4 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக உள்ளே சென்றனர். ஆரம்பத்திலிருந்தே போட்டி சரியில்லை, போட்டியாளர்கள் சரியில்லை என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், ஒவ்வொரு வாரமும் விஜய் சேதுபதியும் அனைவருக்கு எச்சரிக்கை விடுத்து வந்தார். இந்த நிலையில், இந்த வாரம் […]

error: Content is protected !!