ukraine war ஐரோப்பா

உக்ரைனின் மையப்பகுதியில் தாக்குதல் நடத்திய ரஷ்யா ; 10 பேர் பலி

  • June 13, 2023
  • 0 Comments

கடந்த ஆண்டு தொடங்கிய உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ரஷ்யாவின் தாக்குதல்களை மேற்கத்திய நாடுகளின் ராணுவ உதவியோடு உக்ரைன் எதிர்கொண்டு வருகிறது. ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட ஏழு கிராமங்களை மீட்டுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் மையப்பகுதியில் இருக்கும் கிரைவி ரிஹ் என்ற இடத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. […]

ஐரோப்பா

போரில் ரஷ்யாவின் இன்னொரு மூத்த தளபதி பலி

  • June 13, 2023
  • 0 Comments

இன்று அதிகாலை உக்ரைன் ஜனாதிபதியின் சொந்த ஊரான Kryvyi Rih மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் ஆறு பேர் வரை உயிரிழந்துள்ளார்கள். ரஷ்ய தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்தாயிற்று. சாதாரண படைவீரர்கள் முதல் தளபதிகள் வரை பலரை ரஷ்யாவும் இழந்துள்ளது.இந்நிலையில், மூத்த ரஷ்ய தளபதி ஒருவர் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. Major General Sergei Goryachev என்னும் அந்த தளபதி, நேற்று, தெற்கு டோனெட்ஸ்க் பகுதியில் நடந்த பலத்த சண்டையில் பலியாகியுள்ளார்.Goryachev, உக்ரைன் […]

செய்தி

சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட 7 இலங்கையர்கள்! ஐவருக்கு மஞ்சள் அறிவிப்பு

சர்வதேச காவல்துறையான இன்டர்போலின் சிவப்பு அறிவிப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள 6,872 தப்பியோடியவர்களில் ஏழு இலங்கையர்களும் உள்ளடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏழு பேரில், நான்கு இலங்கையர்கள் இலங்கையில் ‘தேடப்படுபவர்கள்’ என்று பட்டியலிடப்பட்டுள்ளனர். ஏனைய மூன்று பேர் தங்கள் பிரதேசங்களில் செய்த குற்றங்கள் தொடர்பாக வெளிநாடுகளால் செய்யப்பட்ட கோரிக்கைகளின் பேரில் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்டர்போலின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள விபரங்களின்படி, இலங்கையர்களான, 38 வயதான டி சொய்சா ஜகமுனி சுஜீவா என்ற கொஸ்கொட சுஜீ, 48 வயதான நடராஜா சிவராஜா, […]

இலங்கை

தாயால் கைவிடப்பட்ட இரு சிறுவர்கள்

  • June 13, 2023
  • 0 Comments

தாயால் கைவிடப்பட்ட ஒன்பது மாத குழந்தை மற்றும் ஒன்பது வயது சிறுவனை, முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். ஒரு பெண் தன் பிள்ளைகளை தன்னிடம் ஒப்படைத்து சிறிது நேரம் அவர்களைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றதாகவும் வெகு நேரம் கழித்தும் அந்தப் பெண் திரும்பி வராததால், சிறுவர்களை பொலிஸில் ஒப்படைக்க தான் தீர்மானித்ததாகவும் குறித்த சாரதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் கணவை கொலை செய்து விட்டு மனைவி செய்த செயல் !

  • June 13, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் பெண் ஒருவர் கணவரை கொன்றுவிட்டு, துக்கத்தில் இருந்து மீள்வது எப்படி என சிறார்களுக்கான புத்தகம் எழுதியவர், தற்போது புதிய விவகாரத்தில் சிக்கியுள்ளார். அமெரிக்காவின் Utah மாகாணத்தை சேர்ந்தவர் 33 வயதான கூரி ரிச்சின்ஸ். இவரே பணக்காரர்களுக்கான சிறைச்சாலைகள் மாகாணத்தில் எங்கெல்லாம் அமைந்துள்ளது என இணையத்தில் தேடியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் பணம் செலுத்த எத்தனை காலமாகும் எனவும் இணையத்தில் தேடியுள்ளார். 2022 மார்ச் மாதம் கூரி ரிச்சின்ஸ் தமது கணவர் […]

உலகம்

யுனெஸ்கோ அமைப்பில் மீண்டும் இணையும் அமெரிக்கா!

  • June 13, 2023
  • 0 Comments

யுனெஸ்கோ அமைப்பில் மீண்டும் இணைய விரும்புவதாக அமெரிக்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் நிலையில் அமெரிக்கா மீண்டும் இணைய விரும்புவதாக தெரிவித்துள்ளது. யுனெஸ்கோ அமைப்பின் நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா இருந்து செயற்பட்டு வந்த நிலையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆட்சியின் போது குறித்த அமைப்பிலிருந்து விலகியுள்ளது. இந்நிலையில், யுனெஸ்கோ அமைப்பில் சீனாவின் ஆதிக்கம் மேலோங்கியது. இதற்கிடையே சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் இருக்கும் மறைமுகப்போட்டித் தன்மையும் அமெரிக்க மீண்டும் இணைவதற்கு வழிவகுத்துள்ளதாக ஆய்வாளர்கள் […]

இலங்கை

பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பற்றாக்குறை!

பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதனால் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக அமைப்பில் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு 11,293 ஆசிரியர்கள் தேவை. ஆனால் தற்போது 6,677 பேரே அந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சாருதத்ய இளங்கசிங்க தெரிவித்தார்.

இலங்கை

இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் எதிர்பார்த்த வருமானத்தை பெறமுடியாது : சுங்க அதிகாரிகள் தெரிவிப்பு!

  • June 13, 2023
  • 0 Comments

வாகன இறக்குமதி உட்பட பல வகையான பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் வரவு செலவு திட்டத்தில் எதிர்பார்த்த வருமானத்தை எட்ட முடியவில்லை என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரிகளினால் சுங்கத்திற்கு 20 வீத வருமானம் கிடைப்பதாகவும்  கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் வரை எதிர்பார்த்த வருமானத்தை எட்ட முடியாது எனவும் சுங்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 2014ஆம் ஆண்டு தொடக்கம் 2022ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அதிகூடிய வரி வருமானம் 2018ஆம் ஆண்டு பெறப்பட்டுள்ளதாகவும்  […]

செய்தி தமிழ்நாடு

ஏழை மக்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய உயர்நீதிமன்ற வழக்கறிஞர்

  • June 13, 2023
  • 0 Comments

சென்னை அடுத்த பட்டாபிராமை சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பி.கே.இளங்கோவன் என்பவர் தனது பிறந்த நாளை ஏழை,எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கொண்டாடியுள்ளார். பட்டாபிராமில் ஏழை எளிய மக்கள் அவசர சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் இலவசமாக செல்ல நவீன வசதிகள் கொண்ட 2 ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்கியுள்ளார். இந்த 2 ஆம்புலன்ஸ்களும் இரண்டு ஓட்டுனர்கள் மற்றும் செவிலியர்களை நியமித்து 24 மணி நேரமும் இயக்கப்படவுள்ளது. இதனை புரட்சி பாரதம் கட்சி தலைவரும் எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்தி துவக்கி வைத்தார். […]

இந்தியா

காவல் நியத்திற்கு சூட்கேசுடன் வந்த பெண்… பொலிஸாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • June 13, 2023
  • 0 Comments

பெங்களூருவில் பெற்ற தாயை கொடூரமாக கொலை செய்து சூட்கேஸில் அடைத்து காவல்நிலையத்திற்கு கொண்டு வந்த மகளால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் செனாலி சென். இவர் பெங்களூருவில் பிசியோதெரபிஸ்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று மைக்கோ லேஅவுட் காவல் நிலையத்திற்கு இரவு ஒரு சூட்கேசுடன் வந்தார்.அப்போது, பொலிஸார் நீங்கள் யார் என்று கேட்டதற்கு செலிமா சென் எதுவும் பேசாமல் நின்றுக்கொண்டிருந்தார். அப்போது எழுந்து வந்த காவலர்களிடம் அப்பெண், கையில் கொண்டு வந்த சூட்கேசை […]

error: Content is protected !!