இலங்கை

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயமும் வெள்ளத்தில் மூழ்கியது

  • November 30, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு – வற்றாப்பளை கிராமத்தில் அமைந்துள்ள கண்ணகி அம்மன் ஆலயமும் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த தினங்களாக இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயலால் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளும் பாதிக்கப்பட்டிருந்தன. கடல்நீர் உட்புகுந்தும், வெள்ளப்பெருக்கும் இன்றும் குறையாமல் இருக்கின்றன. இலங்கையில் இதுவரை 202 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திலும் ஆலயத்திற்குள்ளும் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.

இலங்கை செய்தி

சீரற்ற வானிலையால் யாழ்ப்பாணத்தில் மேலுமொருவர் உயிரிழப்பு

  • November 30, 2025
  • 0 Comments

சீரற்ற வானிலையால் யாழ்ப்பாணத்தில் மேலுமொருவர் உயிரிழப்ப! சீரற்ற வானிலையால் சில தினங்களுக்கு முன்பு மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் ஒருவர் உயிரழந்த நிலையில் யாழ்.பொன்னாலை கடலில் மீனவர் ஒருவர் உயிரழந்துள்ளார். நேற்று மாலை பொன்னாலை சிறு கடலில் மீன்பிடி நடவடிக்காக சென்ற நிலையில் காணாமல்போன பொன்னாலையை சேர்ந்த 63 வயதான நாகு கிருஷ்ணமூர்த்தி எனும் மீனவரின் சடலமே இன்று மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.இதன்படி சீரற்ற வானிலையால் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது

பொழுதுபோக்கு

இலங்கையின் சீரற்ற வானிலைக்கு 212 உயிர்கள் பலி! 218 பேரை காணவில்லை

  • November 30, 2025
  • 0 Comments

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 பேராக அதிகரித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை நெருங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மதியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனர்த்தங்களில் சிக்கி 218 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் 2,73,606 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 9,98,918 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாடு முழுவதும் 1,275 பாதுகாப்பு […]

இலங்கை

“டிட்வா” புயல் எங்கு மையம்கொண்டுள்ளது? வடக்கிற்கு குறையாத ஆபத்து

  • November 30, 2025
  • 0 Comments

“டிட்வா” புயலானது தற்போது காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்கு திசையில் 210 கி.மீ தொலைவில் அகலாங்கு 11.4°N மற்றும் நெட்டாங்கு 80.6°E இற்கு அருகில் மையங்கொண்டுள்ளது. இது தற்போது இலங்கையை விட்டு விலகி வடக்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் இந்தியாவின் தமிழ்நாட்டு கடற்கரைக்குச் சமாந்தரமாக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, நாட்டின் வானிலையில் புயலின் தாக்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதன்படி, வடக்கு, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் […]

உலகம் செய்தி

பிலிப்பைன்ஸில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக போர்க்கொடி – இராஜினாமா செய்ய அழைப்பு!

  • November 30, 2025
  • 0 Comments

பிலிப்பைன்ஸில் வெள்ள தடுப்பு  திட்டத்தில் இடம்பெற்ற  ஊழலுக்கு எதிராக இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஊழலில் தொடர்புடைய உயர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உடனடியாக வழக்குத் தொடரக் கோரி, ரோமன் கத்தோலிக்க திருச்சபை மதகுருமார்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் தலைநகர் மணிலாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே இடதுசாரிக் குழுக்கள் மணிலாவின் பிரதான பூங்காவில் தனியொரு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஊழலுடன் சம்பந்தப்பட்ட  அனைத்து அரசு அதிகாரிகளும் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அவர்கள் மீது […]

உலகம்

இந்தோனேசியாவில் தொடரும் சோகம் – 248 பேர் உயிரிழப்பு, அவசரகாலநிலை பிறப்பிப்பு!

  • November 30, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவில் தொடரும் சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 248 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், 3000 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 78 பேர் காணாமல்போயுள்ளனர். இந்நிலையில் நிலச்சரிவு மற்றம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை சென்றடைவதில் மீட்பு பணியாளர்கள் கடும் சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் உதவி தேவைப்படுபவர்களை அணுகுவதில் பாரிய சவால்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேற்படி சவாலான சூழ்நிலை காரணமாக ஆச்சே (Aceh) மாகாணத்தில் […]

இலங்கை

திடீரென தாழிறங்கிய பிரதான வீதி

  • November 30, 2025
  • 0 Comments

யக்கலவில் உள்ள கம்பஹா விக்ரமாராச்சி சுதேச மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எதிரே உள்ள வீதி இன்று (30) திடீரென தாழிறங்கியதை அடுத்து கொழும்பு – கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக யக்கல முதல் திஹாரிய வரையிலான பாதையை மறு அறிவிப்பு வரும் வரை அதிகாரிகள் மூடிவிட்டனர். பொறியாளர்கள் சேதத்தை மதிப்பிட்டு அவசரகால பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்வதால், வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பகுதியில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம், […]

செய்தி

யாழில் பட்டப்பகலில் இளைஞன் வெட்டி கொலை

  • November 30, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழைக்கு மத்தியில் இளைஞன் ஒருவன் வன்முறை கும்பலால் மிக கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் திருநெல்வேலி சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வேளை குறித்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கொக்குவில் பகுதியை சேர்ந்த இளைஞன் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையில் பிணையில் […]

அறிந்திருக்க வேண்டியவை இலங்கை கருத்து & பகுப்பாய்வு

ஒட்டுமொத்த துயரத்தின் உச்சம் -ரம்புக் எல விலானகம மண்ணில் புதைந்து போன ஒரு கிராமத்தின் கண்ணீர்க்கதை!

  • November 30, 2025
  • 0 Comments

நேற்றிரவு (29.11.2025) நடுநிசி .ஊரே தூக்கத்தில் அயர்ந்து போயிருந்த ஒரு தருணம். நள்ளிரவு 1.30 மணியளவில் சுமார் 50 வீடுகளையும் அதில் உறக்கத்தில் இருந்த 50 குடும்பங்களையும் மரணம் விழுங்கிய துயரத்தை எண்ணிக்கூட பார்க்க முடியாதுள்ளது. இதை எழுதும்போதே கண்கள் பனிக்கின்றன.என்ன நடந்தது? இந்தக் கிராமத்தின் மக்கள் உறக்கத்தில் உறைந்து போயிருந்த கணம் சுற்றுமுற்றும் இருந்த பாறைகளும் மண்மேடுகளும் அவர்கள் மீது சரிந்து விழும் என அவர்கள் தமது கனவில் கூட கண்டிருக்கமாட்டார்கள். கடும் மழையால் பிடிமானம் […]

ஐரோப்பா

பிரித்தானியாவின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

  • November 30, 2025
  • 0 Comments

பிரித்தானியாவின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தெற்கு வேல்ஸில் (south Wales) பலத்த மழை பெய்யும் என்று முன்னறிவிப்பாளர்கள் கணித்துள்ளனர். MET OFFICE இன் அறிவிப்பின்படி இன்றைய தினம் 60-80 மிமீ வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சில பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை அலுவலகம், வெள்ள அபாயம் குறித்த முன்னெச்சரிக்கைகளையும் வெளியிட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் அதிக காற்று வீசும் எனவும் இதனால் மக்கள் சாத்தியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை […]

error: Content is protected !!