அரசியல் இலங்கை செய்தி

தெரிவுக்குழுவின் தலைமைப் பதவி எதிரணிக்கு வேண்டும்!

  • December 9, 2025
  • 0 Comments

தித்வா புயலினால் ஏற்படும் பேரிடர் தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களத்தால் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டதா என்பது பற்றி ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய ஐக்கிய குடியரசு முன்னணி தலைவர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். மேற்படி குழுவின் தலைமைப் பதவி எதிரணிக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். “ வளிமண்டளவியல் திணைக்களத்துக்கு விஞ்ஞானப்பூர்வமான தகவல்கள் நவம்பர் 24, 25 ஆம் திகதிகளில் கிடைத்திருக்கும் என நம்புகின்றேன். எனவே, தேசிய அனர்த்த நிலையை பிரகடனப்படுத்தி நடவடிக்கை […]

அரசியல் இலங்கை செய்தி

ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சிக்கு இடமில்லை: எதிரணி உத்தரவாதம்!

  • December 9, 2025
  • 0 Comments

அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எவ்வித எவ்வித சூழ்ச்சிகளிலும் ஈடுபடாது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார். “ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்நாட்டை ஐந்து வருடங்களுக்கு ஆள வேண்டும். தமது பொறுப்பை நிறைவேற்றாமல் அவர்கள் தப்பிச்செல்ல முடியாது. # நாம் ஆட்சியைக் கவிழ்க்க சூழ்ச்சிசெய்யவில்லை. அதற்கான உத்தரவாதத்தை நாம் வழங்குகின்றோம்.” எனவும் அவர் கூறினார். கடந்த ஒரு வருடமாக நாம் எவ்வித பேரணியையும் நடத்தவில்லை. நாசகார செயலிலும் […]

இலங்கை

மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகள் : மாணவர்களுக்கு விஷேட அறிவிப்பு

  • December 9, 2025
  • 0 Comments

அனர்த்த காலநிலையினால் மூடப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் அனைவரும் டிசம்பர் 15 ஆம் திகதி சேவைக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ தெரிவித்துள்ளார். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் சீருடை விடயத்தில், தளர்வான கொள்கை பின்பற்றப்படும் […]

இலங்கை

நிவாரணம் பெற காத்திருப்போரின் கவனத்திற்கு…..!

  • December 9, 2025
  • 0 Comments

புயல் நிவாரணம் வழங்குவதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிவாரணம் வழங்குவதாக கூறி வரும் நபர்களிடம் தங்களின் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்துக்கொள்ள வேண்டாம் என பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களைக் கோரி, வாட்ஸ்அப், முகப்புத்தகம் மற்றும் பிற சமூக ஊடக தளங்கள் வழியாக ஏராளமான குறுஞ்செய்திகளைப் பரப்புவது சமீபகாலமாக அவதானிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. பேரிடருக்குப் பிந்தைய நிவாரணத்திற்குத் தேவையான தகவல்களைச் சேகரிப்பது மாவட்டச் செயலகங்கள் […]

ஐரோப்பா

ஐரோப்பிய தலைவர்கள் பலவீனமானவர்கள் – ட்ரம்ப் விமர்சனம்!

  • December 9, 2025
  • 0 Comments

உக்ரைன் போர் தொடர்பில் ஐரோப்பிய தலைவர்களை பலவீனமானவர்கள் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர்கள்  குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் உக்ரைன்  போரில் நடவடிக்கை எடுக்கவும் தவறிவிட்டதாகவும்  குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக லண்டன் மேயர் சாதிக் கானை (Sadiq Khan) விமர்சித்த ட்ரம்ப், அவரை பேரழிவு எனவும் அழைத்துள்ளார். மேலும் குடியேற்ற பிரச்சினைகளை கையாலும் விதம் தொடர்பில் பாரிஸ் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபகாலமாக உக்ரைன் – ரஷ்ய போரை நிறைவிற்கு  கொண்டுவருவதில் […]

இலங்கை

அடுத்த 36 மணித்தியாலங்களில் நடக்கப்போவது என்ன?

  • December 9, 2025
  • 0 Comments

நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்களில் 75 மி.மீ க்கும் அதிக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று (09) மாலை 4.00 மணிக்கு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை […]

இலங்கை

வெளிநாட்டு உதவிகளை கண்காணிக்க சிறப்பு குழு நியமனம்! 

  • December 9, 2025
  • 0 Comments

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெளிநாடுகளால் கொடையாக வழங்கப்படும் பொருட்கள் மற்றும் உபகரணங்களை, திறம்பட நிர்வகிப்பதை மேற்பார்வையிடுவதற்கான சிறப்புக் குழுவொன்றை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார். பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையிலான இந்தக் குழுவில், தேசிய பேரிடர் நிவாரண சேவைகள் மையத்தின் மேலதிக செயலர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட மூத்த அரசு அதிகாரிகள், முப்படைகளின் தளபதிகள், காவல்துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். கொடைகள் உதவி தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படுவதை […]

இலங்கை செய்தி

பாடசாலைகளை மீளவும் திறக்கும் திகதி அறிவிப்பு!

  • December 9, 2025
  • 0 Comments

மேல், தெற்கு, வடக்கு, சபரகமுவ, கிழக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் செவ்வாய்க்கிழமை (16) மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவேவே இன்று இதனை அறிவித்துள்ளார். இதற்கமைய நாட்டில் உள்ள 10,076 பாடசாலைகளில், 9,929 பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 147 பாடசாலைகளை மீளவும் திறக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் […]

உலகம்

அதிகரிக்கும் எல்லைப் பதற்றம் – கம்போடியாவில் 07 பொதுமக்கள் பலி!

  • December 9, 2025
  • 0 Comments

தாய்லாந்துடனான சமீபத்திய மோதலில் கம்போடியாவில் குறைந்தது 07 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள்  இன்று  தெரிவித்துள்ளனர். மேலும் அதிகரித்து வரும் பதற்ற நிலை காரணமாக 20,000 பேர் வரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் கோயில் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் அழிவடைந்துள்ளதுடன், பொது சேவைகளை சீர்குலைந்துள்ளதாக கம்போடிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பெரிய தாக்கங்களுக்கு மேலதிகமாக, தாய்லாந்து இராணுவம் எல்லையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கம்போடிய பொதுமக்கள் குடியிருப்புகளில் பல்வேறு வகையான […]

இலங்கை

உயர் தரப்பரீட்சை நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டது

  • December 9, 2025
  • 0 Comments

சீரற்ற காலநிலையால் இடைநிறுத்தப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி முதல் மீண்டும் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ குறிப்பிட்டார். அதேநேரம் ஏனைய வகுப்புகளுக்கான மூன்றாம் தவணை பரீட்சை நடத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் கல்வி பொது தராதர சாதாரண தர மாணவர்களுக்காக மாத்திரம் மூன்றாம் தவணை பரீட்சை இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!