இலங்கை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

  • April 16, 2026
  • 0 Comments

இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரி ஆராச்சி ஆயுதங்களுடன், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரீ – 56 ரக இரண்டு மெகசீன்கள், அதற்கான 221 தோட்டாக்கள் மற்றும் கைகுண்டு ஒன்றும், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உலகம் செய்தி

இஸ்ரேல் உளவாளிகள் நால்வரை கைது செய்தது ஈரான்!

  • April 16, 2026
  • 0 Comments

ஈரான் கிலான் மாகாணத்தில், இஸ்ரேல் உளவு பிரிவான மொசாட்டுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை புரட்சிகர காவல் படை கைது செய்துள்ளது. ஈரானின் முக்கியமான ராணுவ மற்றும் பாதுகாப்பு இடங்களை ரகசியமாகப் புகைப்படம் எடுத்து இணையம் வழியாக கைதான சந்தேகநபர்கள், இஸ்ரேல் அதிகாரிகளுக்கு பகிர்ந்துள்ளனர். எனினும், ஈரான் உளவுத்துறையினரின் தீவிர கண்காணிப்பின் மூலம் இந்த உளவு நடவடிக்கை முறியடிக்கப்பட்டதாக ஈரான் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. போர்ச் சூழலுக்கு மத்தியில் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் செயல்பட்டனர் […]

பொழுதுபோக்கு

ராதிகா நடிக்கும் “காலனி” படத்தின் First Look Poster

  • April 16, 2026
  • 0 Comments

இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில், நடிகை ராதிகா முன்னணி வேடத்தில் நடித்துள்ள “காலனி” படத்தின் First Look Poster வெளியாகியுள்ளது. தாய்கிழவி படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற ராதிகா, இப்படத்தில் மீண்டும் வலுவான மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விரைவில்Teaser, trailer மற்றும் வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் இலங்கை செய்தி

தையிட்டி பிரச்சினை: சர்வதேசம் கழுகுப்பார்வை!

  • April 16, 2026
  • 0 Comments

தையிட்டி விகாரைப் பிரச்சினை சர்வதேச நாடுகளால் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டுவருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் Selvarajah Gajendran தெரிவித்தார். அமைச்சர்கள் குழு விரைவில் வெளிநாட்டுக்கு செல்லவுள்ளது. இவ்வாறு வெளிநாடு செல்வதற்கு முன்னர் தையிட்டி பிரச்சினையைத் தீர்ப்பது போன்று காட்டிக் கொள்வதற்காகவே அவசர அவசரமாக காணி உரிமையாளர்களோடு கலந்துரையாடப்பட்டுள்ளது எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். தந்தை செல்வா கலயரங்கில் நேற்று நடைபெற்ற ‘தையிட்டி: அடுத்து என்ன?’ எனும் தலைப்பில் தையிட்டி காணி உரிமையாளர்களுக்கும் […]

உலகம் செய்தி

ஈரானில் பாடசாலைகளுக்கு பூட்டு: 21 ஆம் திகதி முதல் இணையவழி கற்பித்தல்!

  • April 16, 2026
  • 0 Comments

ஈரானில் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் அனைத்து மாணவர்களுக்கும் இணையவழி ஊடாக கற்பித்தல் நடவடிக்கை இடம்பெறும் என அந்நாட்டு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஆரம்ப கல்வி முதல் உயர்கல்விவரை அனைத்து நிலைகளிலும் உள்ள மாணவர்களுக்கு இணையவழியில் கற்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டு மறு உத்தரவு வரும் வரை கற்றல் நடவடிக்கைகள் அனைத்தும் இணையம் வாயிலாகவே இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் சூழலைக்கருத்திற்கொண்டே இம்முடிவு […]

உலகம்

கைதி பரிமாற்றம் : பிரான்ஸில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஈரானிய பிரஜை விடுதலை!

  • April 16, 2026
  • 0 Comments

பிரான்ஸில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானிய பிரஜையான மஹ்தியே எஸ்பாந்தியாரி (Mahdieh Esfandiari ) நேற்று தாயகம் திரும்பியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே கைதிகள் பரிமாற்றம் செய்யப்படும் ஒரு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அவர் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது நாடு திரும்பியுள்ளார். 2018 முதல் பிரான்சில் வசித்து, அங்கு மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி வந்த லியோன் பல்கலைக்கழகப் பட்டதாரியான இவர், கடந்த ஆண்டு பிப்ரவரியில் “பயங்கரவாதத்தை” ஊக்குவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது […]

உலகம் செய்தி

லெபனானில் 10 லட்சம் பேர் இடம்பெயர்வு!

  • April 16, 2026
  • 0 Comments

லெபனானில் தீவிரமடைந்த மோதல் காரணமாக சுமார் 10 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என ஐ.நா. அகதிகள் அமைப்பு UN’s refugee agency கவலை வெளியிட்டுள்ளது. லெபனானின் மொத்த சனத்தொகையில் ஐந்து ஒரு பங்கினர் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளமை அவல நிலையின் தீவிரத்தை உணர்த்துகிறது என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, லெபனானுக்கு சர்வதேச சமூகம் அவசரகால நிதி மற்றும் நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த பெப்ரவரி 28 ஆம் […]

உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரம் : சமரச முயற்சியில் சீனா!

  • April 16, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது சர்வதேச சமூகத்தின் ஒருமித்த கோரிக்கை என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தனது ஈரானிய சகாவிடம் தெரிவித்தார். ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் தொலைபேசியில் பேசிய வாங் யி, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் பேசிய அவர்  ஹோர்முஸ் ஜலசந்தியின் கரையோர நாடாக ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். ஆனால் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்தின் சுதந்திரமும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் […]

உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் மற்றுமொரு கப்பலை முற்றுகையிட்ட அமெரிக்கா!

  • April 16, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தியை விட்டு வெளியேற முயன்ற மற்றொரு கப்பலை அமெரிக்க கடற்படையினர் வெற்றிகரமாக திருப்பி அனுப்பியுள்ளனர். திருப்பி அனுப்பப்பட்ட கப்பல், ஈரான் கொடி ஏற்றப்பட்ட ஒரு சரக்குக் கப்பல் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கையை யுஎஸ்எஸ் ஸ்ப்ரூயன்ஸ் (DDG-111) என்ற போர்க்கப்பல் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த கப்பலுடன் அமெரிக்கா இதுவரை 10 கப்பல்களை வெற்றிகரமாக திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கடற்படை முற்றுகையை விதித்து மூன்றே […]

உலகம் செய்தி

இஸ்ரேலுக்கான முன்னுரிமையை அமெரிக்கா கைவிட வேண்டும்: ஈரான் வலியுறுத்து!

  • April 16, 2026
  • 0 Comments

இஸ்ரேலுக்கு முன்னுரிமை அளிக்கும் போக்கை அமெரிக்கா கைவிட வேண்டும் என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் Bagher Ghalibaf வலியுறுத்தியுள்ளார். அத்துடன், லெபனான் விவகாரத்தில் அமெரிக்கா ஒரு விரிவான போர்நிறுத்த உடன்படிக்கைக்குக் கட்டுப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். லெபனானில் அமைதி திரும்புவது ஹிஸ்புல்லா அமைப்பின் தொடர்ச்சியான போராட்டத்தின் வெற்றியாகவே அமையும் எனவும் ஈரான் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார். லெபனானில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சி இடம்பெறும் நிலையிலேயே ஈரான் தரப்பில் இருந்து இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான […]

error: Content is protected !!