செய்தி

பீகாரில் மூன்று மகள்களுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்

  • December 15, 2025
  • 0 Comments

பீகாரின்(Bihar) முசாபர்பூரில்(Muzaffarpur) உள்ள சக்ரா(Chakra) காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட நவல்பூர் மிஷ்ராலியா(Nawalpur Mishralia) கிராமத்தில் ஒரு தினக்கூலி தொழிலாளி மற்றும் அவரது மூன்று மகள்கள் தற்கொலை செய்து கொண்டதாகக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தினக்கூலி தொழிலாளியான 40 வயது அமர்நாத் ராம், தனது மகள்களான 11 வயது ராதா குமாரி, 9 வயது ராதிகா மற்றும் 7 வயது ஷிவானி ஆகியோரை தூக்கிலிட்டு, பின்னர் அதே வழியில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மனைவி இறந்த பிறகு […]

உலகம் செய்தி

போண்டியில் உயிர்களைக் காத்த ஹீரோ! குண்டடிபட்ட அகமதுக்குக் குவிந்த மனிதாபிமான உதவி!

  • December 15, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) நடந்த துப்பாக்கிச் சுட்டு சம்பவத்தின் போது துணிச்சலாகச் செயல்பட்ட அகமது அல் அகமது (Ahmed al Ahmed, 43) என்ற நபருக்கு ஆஸ்திரேலியா முழுவதும் இருந்து அன்பளிப்பாக 1.1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலருக்கும் அதிகமாக இந்திய மதிப்பில் சுமார் 744,000 ரூபா வரை கிடைத்துள்ளது. யூதர்களின் ஹனுக்கா கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவரிடம் இருந்து அகமது துப்பாக்கியைப் பிடுங்கி, அவரைக் […]

உலகம் செய்தி

கொலை குற்றச்சாட்டில் ஹாலிவுட் இயக்குனர் ராப் ரெய்னரின் மகன் கைது

  • December 15, 2025
  • 0 Comments

திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான ராப் ரெய்னரும்(Rob Reiner) அவரது மனைவி மைக்கேல் சிங்கர் ரெய்னரும்(Michelle Singer Reiner) ஞாயிற்றுக்கிழமை பிரெண்ட்வுடில்(Brentwood) உள்ள ஒரு வீட்டில் இறந்து கிடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, கொலைக் குற்றச்சாட்டின் பேரில் ராப் ரெய்னரின் மகன் நிக் ரெய்னர்(Nick Reiner) கைது செய்யப்பட்டுள்ளார். 32 வயதான நிக் ரெய்னர் கைது செய்யப்பட்டு 4 மில்லியன் டாலர் ஜாமீனில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை மாலை அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் […]

இந்தியா செய்தி

மும்பை-டெல்லி விரைவுச் சாலை மூடுபனி காரணமாக ஏற்பட்ட விபத்தில் நால்வர் மரணம்

  • December 15, 2025
  • 0 Comments

டெல்லி-மும்பை(Delhi-Mumbai) விரைவுச் சாலையில் மூடுபனி காரணமாக சுமார் 20 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிகாலை நடந்த இந்த விபத்தில், இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 15 முதல் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிக சுமை ஏற்றப்பட்ட இரண்டு லாரிகள் மோதியதில் இருந்து இந்த சம்பவம் தொடங்கியது. மோதிய உடனேயே, பின்னால் இருந்து வந்த ஏனைய வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்தப் பெரிய விபத்துக்கு, அந்தப் பகுதியைச் சூழ்ந்திருந்த […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் நடந்த சாலை விபத்தில் மூவர் மரணம் – 37 வயது பெண் கைது

  • December 15, 2025
  • 0 Comments

பிரித்தானியாவின்(England) லெய்செஸ்டர்ஷையர்(Leicestershire) பகுதியில் உள்ள A46 பாதையில் நடந்த வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 5 பேர் பயணித்த நீல நிற BMW வாகனம், நாட்டிங்ஹாமில்(Nottingham) இருந்து தெற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதாக லெய்செஸ்டர்ஷயர் காவல்துறை தெரிவித்துள்ளது. ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதன் மூலம் மரணத்தை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் 37 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். காரில் […]

உலகம் செய்தி

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ஜெர்மனியில் உயர்மட்ட பேச்சுவார்த்தை

  • December 15, 2025
  • 0 Comments

உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இராஜதந்திர முயற்சிகள் தீவிரமடைந்து வருவதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, அமெரிக்க தூதுவர்கள் மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் ஜெர்மனியில் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கத்திய பாதுகாப்பு உத்தரவாதங்கள் கிடைத்தால், நேட்டோவில் இணையும் தனது இலட்சியத்தை கைவிட தயாராக இருப்பதாக செலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ஆனால் முக்கிய விவகாரங்களில் எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது இன்னும் […]

செய்தி வாழ்வியல்

நீரிழிவு நோயாளிக்கான பாரம்பரிய உணவு மாற்றம்: நிபுணர் வழிகாட்டி.

  • December 15, 2025
  • 0 Comments

நீரிழிவு நோயைக் (Diabetes) கட்டுக்குள் வைத்திருப்பதில் இலங்கை மற்றும் தென்னிந்திய தமிழ் உணவு முறைக்கு உள்ள சவால்களையும் சந்திக்கின்றனர். அதனைச் சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய அறிவார்ந்த மாற்றங்களையும் இந்தப் பகுப்பாய்வு விளக்குகிறது. மேலும், பாரம்பரிய உணவுகளைக் கைவிடாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிமுறைகளை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். பாரம்பரியமாகத் தமிழர்களின் உணவில் அரிசி முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், வெள்ளை அரிசியில் உள்ள கார்போஹைட்ரேட் ரத்த சர்க்கரை அளவை வேகமாக உயர்த்தும் அபாயம் உள்ளது. ஆகவே வெண்மையான அரிசிக்கு பதிலாக […]

இலங்கை

பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள் – தகவல்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் நாளையுடன் நிறைவு

  • December 15, 2025
  • 0 Comments

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள் தொடர்பான தகவல்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் நாளை பிற்பகல் 02 மணி வரை நீடித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு அமைச்சு அறிவித்துள்ளது. கைத்தொழில் பேரிடர் ஆதரவு மையம் இன்றுவரை 18,321 விசாரணைகளைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சின் தகவல்படி, கைத்தொழில் அமைச்சின் உற்பத்தித் துறையின் கீழ் உள்ள 6,362 நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், 7,510 நுண் நிறுவனங்கள், 6,256 சிறிய அளவிலான நிறுவனங்கள், 3,998 நடுத்தர அளவிலான நிறுவனங்கள், மற்றும் 557 […]

உலகம் செய்தி

ஆஸ்திரேலியா கடற்கரை துப்பாக்கி சூடு – தாக்குதல் நடந்த இடத்தில் இருந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்

  • December 15, 2025
  • 0 Comments

கடந்த வாரம் சிட்னியின்(Sydney) பாண்டியில்(Bondi) பயங்கரவாதத் தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகில் இங்கிலாந்து(England) கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன்(Michael Vaughan) இருந்ததாக தெரிவித்துள்ளார். மைக்கேல் வாகன் ஆஸ்திரேலியாவில் ஆஷஸ்(Ashes) தொடர் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற போது தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த மைக்கேல் வாகன், தானும் தனது குடும்பத்தினரும் “தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில்” இருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த அனுபவத்தை “பயங்கரம்” என்று […]

உலகம் செய்தி

போண்டி (Bondi) துப்பாக்கிச்சூடு – சட்டங்களை கடுமையாக்கும் ஆஸ்திரேலியா! காணொளி இணைப்பு!

  • December 15, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற  போண்டி (Bondi) கடற்கரையில் நடந்த யூத கொண்டாட்டத்தின் போது முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், துப்பாக்கி தொடர்பான சட்டங்களை கடுமையாக்கவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. நேற்று முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல்தாரிகளில் ஒருவர் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். மற்றொரு நபர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காவல்துறையினர் கண்காணிப்பில் உள்ளார். சந்தேக நபர்களின் பெயர்களை காவல்துறையினர் வெளியிடவில்லை, ஆனால் தேசிய ஒளிபரப்பாளரான ஏபிசி மற்றும் […]

error: Content is protected !!