‘சிறைச்சாலை சாம்ராஜ்யம்’ தொடர்பில் சட்டமா அதிபருக்கு இப்போதுதான் தெரியுமா? சுதேஷ் நந்திமால்
இலங்கையில் கைதிகள் மற்றும் விடுதலையானவர்கள் இருவரையும் குறிவைத்து நடக்கும் பல அட்டூழியங்களுக்குப் பின்னால் சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு உள்ளதாக கைதிகளின் உரிமைகளுக்காக செயற்படும் அமைப்பின் முன்னணி ஆர்வலர் குற்றம் சாட்டியுள்ளார். சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவை ‘கைதிகளை நசுக்குவதற்குப் பொறுப்பான ஒரு பிரிவு’ என அழைக்கும் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுதேஷ் நந்திமால், அந்தப் பிரிவால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் அரச அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படுவது, அந்த நிலைமையின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்துள்ளதாக குறிப்பிடுகின்றார். சித்திரவதை, கடத்தல் […]













