இங்கிலாந்து மகளிர் கால்பந்து அணிக்கு கிடைத்த பரிசு தொகை
16 அணிகள் பங்கேற்ற 14வது பெண்கள் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. இதில் பாசெல் நகரில் அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியன் ஸ்பெயின் அணி, நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் வழக்கமான 90 நிமிடங்களில் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. இதையடுத்து ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் கோல் எதுவும் விழவில்லை. இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. […]













