இலங்கை

இலங்கையில் அறிமுகப்படுத்திய வட்ஸ்அப் எண் – 2000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு

  • August 16, 2025
  • 0 Comments

பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய அறிமுகப்படுத்திய புதிய வட்ஸ்அப் எண்ணுக்கு இதுவரை 2000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குற்றங்கள் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் நேரடியாக பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடளிப்பதற்கு, அவரால் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடுகள் குறித்து ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறுஞ்செய்திகள், காணொளிகள் மற்றும் புகைப்படங்களை நேரடியாக பொலிஸ் மாஅதிபருக்கு அனுப்ப 071 859 88 88 என்ற வட்ஸ்அப் எண் கடந்த 13 […]

இலங்கை

இலங்கையில் கோர விபத்து – ஒருவர் பலி – 22 பேர் படுகாயம்

  • August 16, 2025
  • 0 Comments

மொனராகலை வெலியாய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பயணிகள் பேருந்தும், சுற்றுலா சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 22 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதி உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். தம்பகல்லவிலிருந்து மொனராகலை நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும், சுற்றுலா பயணத்தில் ஈடுபட்டிருந்த தனியார் பேருந்தும் மோதியதில் இந்த துயர […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

புட்டின் – ஜெலன்ஸ்கி விரைவில் பேச்சுவார்த்தை? டிரம்ப் நம்பிக்கை

  • August 16, 2025
  • 0 Comments

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் இரு நாடுகளுக்கும் இடையிலான போரை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். அந்தச் சந்திப்பைச் செயல்படுத்துவது ஜெலன்ஸ்கியின் கையில் உள்ளதாக டிரம்ப் கூறினார். ஐரோப்பிய நாடுகளும் அதில் ஈடுபடவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் விரும்பினால் தாமும் அந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளத் தயாராக இருப்பதாகத் டிரம்ப் கூறினார். புட்டினைச் சந்தித்த பிறகு திரு டிரம்ப் Fox தொலைக்காட்சியில் பேசினார். […]

வாழ்வியல்

வெந்நீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள்!

  • August 16, 2025
  • 0 Comments

வெந்நீர் குடிப்பதால் செரிமானம் மேம்படும், மலச்சிக்கல் நீங்கும், உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேறும், சரும ஆரோக்கியம் மேம்படும், மேலும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். கடும் காய்ச்சல் உள்ள நிலையில் ஒருவருக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டால், வெந்நீரைச் சிறிது சிறிதாகப் பருகக் கொடுப்பது நம் முன்னோர் வழக்கத்திலிருந்தது. ஆனால், அந்தக் காய்ச்சல், வாதம் மற்றும் கபதோஷங்களால் ஏற்பட்டிருந்தால் மட்டுமே இந்த ஏற்பாடு. ஆயுர்வேதத்தில் பித்த தோஷத்தினால் ஏற்படும் காய்ச்சலில் ஷடங்கபானீயம் எனும் மூலிகைத் தண்ணீரைப் பருகத் தருவார்கள். மந்தமான […]

ஆரோக்கியம்

வெண்மையாக்கும் பற்பசைகள் பயன்படுத்தும் மக்களுக்கு பல் நிபுணர்கள் எச்சரிக்கை

  • August 16, 2025
  • 0 Comments

வெண்மையான புன்னகையை நாடி வெண்மையாக்கும் பற்பசைகளை பயன்படுத்தினால் ஈறுகளுக்கு நீடித்த சேதத்தை ஏற்படுத்தும் என்று பல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வெண்மையாக்கும் பற்பசைகள் உண்மையில் பற்களை வெண்மையாக்குவதில்லை. அவை வெளிப்புற கறைகளை மட்டும் அகற்றி பற்கள் வெண்மையாகத் தெரிகின்றதுபோல் செய்யும் என மருத்துவர் ஜேம்ஸ் மார்டினியாக் தெரிவித்துள்ளார். ஆனால், இதில் உள்ள அதிக சிராய்ப்பு பொருட்கள் பற்சிப்பியை மெலிதாக்கி, பற்களை மஞ்சளாக்கவும், உணர்திறன் அதிகரிக்கவும் செய்கின்றன என அவர் குறிபிப்பிட்டுள்ளார். RDA (Relative Dentin Abrasivity) மதிப்பீட்டின் அடிப்படையில், […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Youtube பயனீட்டாளர்களின் வயதை கண்டறியும் AI

  • August 16, 2025
  • 0 Comments

Youtube தளத்தில் பெரியவர்களாகக் காட்டிக்கொள்ளும் சிறுவர்களைக் கண்டறிய அந்நிறுவனம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. அந்தப் புதிய பாதுகாப்பு அம்சம் அமெரிக்காவில் நடைமுறைக்கு வந்தது. சமூக ஊடகங்களில் பெரியவர்களுக்காக வெளிவரும் உள்ளடக்கங்களைப் பிள்ளைகள் பார்க்கக்கூடாது என்று அக்கறை எழுந்தது. இனி பயனீட்டாளர் எவ்வித காணொளிகளைக் காண்கிறார், அவரது Youtube கணக்கு எவ்வளவு நாள்களாகச் செயல்படுகிறது போன்ற தகவல்களைக்கொண்டு அவரது உண்மையான வயதைக் கண்டுபிடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. பயனீட்டு அனுபவமும் பாதுகாப்பும் வயதிற்கு ஏற்ப மாறும் என்று குறிப்பிடப்படுகிறது. […]

ஆசியா

கராச்சியில் மருத்துவமனைகளில் நெருக்கடி – பரிதாப நிலையில் மக்கள்

  • August 16, 2025
  • 0 Comments

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், குறிப்பாக கராச்சியில், அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள், வென்டிலேட்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூனில் வெளியான ஒரு அறிக்கையின்படி, மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் நோயாளிகளும் இந்த சூழ்நிலையால் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றனர். நகரின் முக்கிய மருத்துவமனைகளில் 6,500 படுக்கைகள் மற்றும் 250 வென்டிலேட்டர்கள் மட்டுமே உள்ளன, மேலும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் தொடர்ச்சியான பற்றாக்குறையால், அவர்களால் நோயாளிகளின் எண்ணிக்கையை நிர்வகிக்க […]

விளையாட்டு

வாஷிங்டன் சுந்தருக்கு தொடர்ச்சியாக ஆதரவு கொடுக்கும் கம்பீர்! சகோதரி நெகிழ்ச்சி

  • August 16, 2025
  • 0 Comments

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஏன் ஆதரவு அளிக்கிறார் என்பது குறித்து அவரது சகோதரி ஷைலஜா சுந்தர், NDTV-யின் Tea, Toast and Sports Podcast-ல் பகிர்ந்து கொண்டார். கம்பீர், பல திறன்களைக் கொண்ட கிரிக்கெட் வீரர்களையும், எந்தப் பணியையும் ஏற்கத் தயாராக இருக்கும் வீரர்களையும் விரும்புவதாக அவர் கூறினார். இது குறித்து பேசிய “கவுதி பாய், வாஷி (வாஷிங்டன்) எந்த சூழலிலும் அழுத்தத்தைத் தாங்கி சிறப்பாக செயல்படும் திறனை […]

இலங்கை

இலங்கை காலநிலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

  • August 16, 2025
  • 0 Comments

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (16) பலத்த் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் முக்கியமாக சீரான வானிலை நிலவக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

டிரம்ப் – புட்டின் 3 மணி நேர பேச்சுவார்த்தை – முடிவு எட்டப்படாமல் நிறைவு

  • August 16, 2025
  • 0 Comments

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் இடையேயான முக்கியமான பேச்சுவார்த்தைகள் உறுதியான உடன்பாடு இல்லாமல் முடிவடைந்துள்ளன. அலாஸ்காவில் உள்ள எல்ம்ஹர்ஸ்ட்-ரிச்சர்ட்சன் ராணுவ தளத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் முடிவடைந்தன. இரு உலக வல்லரசுகளும் கிட்டத்தட்ட 3 மணி நேரம் விவாதித்தன. இருப்பினும், பேச்சுவார்த்தைக்குப் பிறகு எந்த பொது அறிக்கையும் வெளியிடப்படவில்லை, மேலும் அவர்கள் எந்த ஒப்பந்தத்தையும் அல்லது போர் நிறுத்தத்தையும் அறிவிக்காமல் […]

error: Content is protected !!