இன்றைய முக்கிய செய்திகள் மத்திய கிழக்கு

காஸா மக்களை குடியமர்த்த தெற்கு சூடானுடன் ஆலோசனை நடத்தும் இஸ்ரேல்

  • August 17, 2025
  • 0 Comments

காஸா பகுதியில் தொடர்ந்து நடைபெறும் போர்களால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களை வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் மறுகுடியமாற்றும் திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து இஸ்ரேல் அரசு அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் மூத்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியான தகவலின்படி, தற்போது வரை எந்த உத்தியோகப்பூர்வ உடன்பாடும் எட்டப்படவில்லை. கடந்த மாதம் இஸ்ரேலுக்கு வந்த தெற்கு சூடான் வெளியுறவுத் துறை அமைச்சர் மண்டே செமயா கும்பாவுடன் முதன்முறையாக இந்த விவகாரம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. […]

உலகம்

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்

  • August 17, 2025
  • 0 Comments

இந்தோனேசிய தீவான சுலவேசியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், டோங்கா தீவில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 35 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் டெனாகாவின் தெற்குப் பகுதியில் இருந்து பதிவாகியுள்ளது.

ஐரோப்பா

போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை – கடும் கோபத்தில் ஜெலன்ஸ்கி

  • August 17, 2025
  • 0 Comments

போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை எனவும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை எனவும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அலாஸ்காவில் உக்ரைன் விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் – ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் 3 மணி நேரமாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக, ஜெலன்ஸ்கி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது: பேச்சுவார்த்தை நாளில் கூட, மக்களை ரஷ்யா கொலை செய்கிறது. சமீபத்தில், அமெரிக்கா மற்றும் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அச்சுறுத்தும் காய்ச்சல் தொற்று – 118 பேர் உயிரிழப்பு

  • August 17, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின், குயின்ஸ்லாந்தில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் காய்ச்சலால் 118 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 1-12 வயதுடைய குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். COVID-19 மற்றும் RSV போன்ற பிற நோய்களும் காய்ச்சலுடன் பரவக்கூடும் என்பதால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது முக்கியம். குயின்ஸ்லாந்தில் 30க்கும் மேற்பட்ட பாடசாலைகள் குழந்தைகள் நேற்று காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் குறிப்பாக ஆபத்தில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து சுகாதார ஆணையர் மெக்டோகல் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ChatGPT பயனர்களின் சாட்கள் கூகுளில் கசிவா?

  • August 17, 2025
  • 0 Comments

சாட்ஜிபிடி-யின் ஏஐ சாட்பாட்டில் பயனர்கள் மேற்கொள்ளும் தனிப்பட்ட சாட்கள் கூகுளில் கசிந்ததாக தகவல் வெளியானது. அது குறித்து விரிவாக பார்ப்போம். கசிந்துள்ள சாட்ஜிபிடி பயனர்களின் உரையாடல்கள் கூகுளில் இடம்பெற்று இருந்தாலும் அதை எப்படி தேடுவது என அறிந்தவர்களுக்கு மட்டுமே கிடைத்தது. இதில் பயனர்கள் மேற்கொண்ட ப்ராம்ப்ட் மற்றும் அதற்கு ஏஐ ஜெனரேட் செய்த பதில்கள் இதில் கிடைக்கப் பெறுவதாக தகவல். இதற்கு காரணம் என்ன? – சாட்ஜிபிடி-யில் உள்ள ‘ஷேர்’ அம்சம்தான் இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது. […]

விளையாட்டு

கடும் காயம் அடைந்தவருக்கு பதிலாக மாற்று வீரருக்கு BCCI அனுமதி!

  • August 17, 2025
  • 0 Comments

உள்ளூர் போட்டிகளில் கடும் காயம் அடைந்தவருக்கு பதிலாக மாற்று வீரரை களமிறக்க பி.சி.சி.ஐ., அனுமதித்துள்ளது. சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது, நான்காவது போட்டியில் இந்தியாவின் ரிஷாப் பன்ட்டிற்கு வலது கால் பாத விரல் எலும்பில் முறிவு ஏற்பட்டது. வலியுடன் துணிச்சலாக களமிறங்கி ‘பேட்’ செய்தார். இதே போல ஐந்தாவது டெஸ்டில் இங்கிலாந்து வீரர் வோக்சின் இடது கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அவரும் கடைசி நாள் ஆட்டத்தில் வலியுடன் பேட்டிங் செய்ய களமிறங்கினார். காம்பிர் ஆதரவு: […]

இலங்கை

இலங்கை காலநிலை தொடர்பில் எச்சரிக்கை

  • August 17, 2025
  • 0 Comments

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

புட்டினுடன் சந்திப்பு! அமெரிக்கா – இந்தியா வரி விவகாரத்தில் திடீரென முடிவை மாற்றிய டிரம்ப்

  • August 17, 2025
  • 0 Comments

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட இரண்டாம் நிலை வரி நிறுத்தப்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இடையே அலாஸ்காவில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் தனது முடிவை மாற்றி கொண்டுள்ளார்.. இந்த சந்திப்பைத் தொடர்ந்து விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “ரஷ்யாவிடம் அதிக எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட இரண்டாம் நிலை வரி நிறுத்தப்படலாம்,” என்று தெரிவித்தார். இந்தியா, ரஷ்யாவிடம் […]

வட அமெரிக்கா

10 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்தம் – கனடாவில் முடங்கிய விமான இயக்கம்

  • August 17, 2025
  • 0 Comments

கனடாவில் 10,000க்கும் அதிமான விமான பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் விமான செயற்பாடு முடங்கியுள்ளது. கனடாவின் மிக பெரிய விமான நிறுவனமான எயார் கனடா 64 நாடுகளுக்கு தினமும் 700க்கும் மேல் விமானங்களை இயக்கி வருகிறது. ஊதியம் தொடர்பாக ஏர் கனடா விமானப்பணியாளர்களுக்கும் ஏர் கனடா நிறுவனத்திற்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து தாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக புதன்கிழமை இரவே விமான பணியாளர்கள் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், நேற்று […]

செய்தி மத்திய கிழக்கு

சர்வதேச எதிர்ப்புகளை மீறி மேற்கு கரையில் 3,400 வீடுகள் கட்ட அனுமதி வழங்கிய இஸ்ரேல்!

  • August 17, 2025
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையின் சர்ச்சைக்குரிய பகுதியில் 3,401 வீடுகளைக் கட்டுவதற்கு இஸ்ரேல் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையிலும், சர்வதேச அளவில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. குறிப்பாக, ஜெருசலேமின் அருகே உள்ள ஈ1 எனப்படும் பிரதேசத்தில் புதிய கட்டிட வேலைகளைத் தொடங்க அனுமதியளிக்கப்பட்டது முக்கியமான மாற்றமாகக் கருதப்படுகிறது. இதுவரை, ஈ1 பகுதியில் கட்டுமானங்களை இஸ்ரேல் நீண்ட காலமாக இடைநிறுத்தி வைத்திருந்தது. ஏனெனில், அந்த பகுதியில் புதிய குடியிருப்புகள் அமைக்கப்படுவதால், மேற்குக் கரையைக் கொண்டாடி எதிர்காலத்தில் உருவாக்கப்படக்கூடிய பாலஸ்தீன மாநிலம், […]

error: Content is protected !!