ஐரோப்பா

பிரான்ஸில் பாரிய போராட்டத்திற்கு ஏற்பாடு – 09 இலட்சம் மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்ப்பு!

  • September 18, 2025
  • 0 Comments

பிரான்ஸில் முன்மொழியப்பட்ட பட்ஜெட் வெட்டுக்களுக்கு எதிராக பாரிய போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டங்களுக்கு  ஆசிரியர்கள், ரயில் ஓட்டுநர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் ஏராளமான இளைஞர்கள் ஆதரவு அளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் இந்த போராட்டத்தில் 600,000 முதல் 900,000 பேர் வரை பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போராட்டங்கள் காரணமாக சில பகுதிகளில் அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்படும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

திருகோணமலை கடற்பகுதியில் சற்று முன்னர் பதிவான நிலநடுக்கம்!

  • September 18, 2025
  • 0 Comments

திருகோணமலை கடல் பகுதியில்  இன்று (18.09) மாலை  3.9 ரிக்டர் அளிவல்   நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. திருகோணமலையில் இருந்து வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிறுவப்பட்ட நான்கு நிலநடுக்க வரைபடங்களாலும் இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்க வரைபடங்கள் மகாகனதர, ஹக்மான, பல்லேகலே மற்றும் புத்தங்கல பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முக்கிய செய்திகள்

விஜய்க்கு சார்பாக தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம் – காவல்துறைக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!

  • September 18, 2025
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரத்திற்கு காவல்துறையினர்  பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் திருச்சியில் தனது முதலாவது பிரச்சாரத்தை நடத்தியிருந்தது. அதில் த.வெ.க கட்சிக்கு பல்வேறு நெருக்கடிகளை ஆளும் தி.முக. அரசு கொடுத்துவருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியிருந்தனர். இந்நிலையில் இது தொடர்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிகள் அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. த.வெ.க தலைவர் […]

ஆசியா

வடகொரியாவில் இருந்து வெளியேறும் மக்கள் தொடர்பில் தென்கொரியா காட்டும் கரிசனை!

  • September 18, 2025
  • 0 Comments

வடகொரியாவில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழும் மக்கள் சில சந்தர்ப்பங்களில் அங்கிருந்து தப்பிச் சென்று வேறு நாடுகளில் தங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கின்றனர். இந்நிலையில் அவ்வாறு தப்பி வரும் மக்களை defectors என அழைப்பதை நிறுத்த வேண்டும் என தென்கொரியா வலியுறுத்துகிறது. இந்த சொற்பிரயோகமானது எதிர்மறையான அர்த்தத்தை கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொரிய நாடுகளுக்கு இடையேயான உறவுகளுக்குப் பொறுப்பான அரசாங்க அமைப்பான தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகம் இதனை மதிப்பாய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கிலிருந்து தப்பியோடிய மக்கள் என்று […]

இந்தியா இன்றைய முக்கிய செய்திகள்

இந்தியாவில் நன்னீர் நீர்நிலைகளில் நீரை எடுக்கும் மக்களுக்கு ஓர் எச்சரிக்கை!

  • September 18, 2025
  • 0 Comments

இந்தியாவின் கேரள மாநிலத்தில் மூளையை உண்ணும் அமீபாவால் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  குறித்த அமீபாவானது நன்னீர் நீர்நிலைகள் மூலம் பரவுகிறது. கேரளாவில் 70 அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளதுடன், 19 பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர். அவர்களில்  ஒன்பது நோயாளிகள் இந்த மாதத்தில் (09) இறந்ததாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (PAM) ஏரிகள், குளங்கள், ஆறுகள்  போன்ற நன்னீர் நீர்நிலைகளில் காணப்படும். இது நாசி குழி வழியாக உடலில் […]

வட அமெரிக்கா

இலகுரக டார்பிடோக்களை நோர்வேக்கு விற்பனை செய்ய அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல்

  • September 18, 2025
  • 0 Comments

இலகுரக டார்பிடோக்கள் மற்றும் தொடர்புடைய உபகரணங்களை நோர்வேக்கு விற்பனை செய்ய அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளதாக பென்டகன் புதன்கிழமை தெரிவித்துள்ளது. அதன் மதிப்பிடப்பட்ட செலவு $162.1 மில்லியன் என்று பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த முன்மொழியப்பட்ட விற்பனை நோர்வேயின் தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களைச் சந்திக்கும் திறனை மேம்படுத்தும் மற்றும் அமெரிக்கா மற்றும் பிற நேட்டோ உறுப்பினர்களுடன் அதன் இயங்குநிலையை அதிகரிக்கும். வர்ஜீனியாவின் ஆர்லிங்டனில் அமைந்துள்ள RTX கார்ப்பரேஷன் முதன்மை ஒப்பந்ததாரராக இருக்கும். […]

இந்தியா விளையாட்டு

சட்டவிரோத பந்தய செயலி: யுவராஜ் சிங்,சோனு சூட், ராபின் உத்தப்பா ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ள அமலாக்கத்துறை

  • September 18, 2025
  • 0 Comments

இணையச் சூதாட்டச் செயலிகள் மூலம் சட்டவிரோதமாக ரூ. 2,000 கோடி அளவுக்குப் பணப் பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக இந்தியா முழுவதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இணையச் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவண் உள்ளிட்ட 29 பிரபலங்கள்மீது ஏற்கெனவே அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த வழக்கில், பாலிவுட் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா – குயின்ஸ்லாந்தில் மறுஅறிவிப்பு வரும் வரை முகக்கவசம் அணிய உத்தரவு!

  • September 18, 2025
  • 0 Comments

வடமேற்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலாப் பகுதியில் தட்டம்மை பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கெய்ர்ன்ஸுக்கு அதிகாரிகள் அவசர பொது சுகாதார எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர். கடந்த மூன்று வாரங்களில் 06 பேர் தொற்று பாதிப்புடன் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கெய்ர்ன்ஸ் மருத்துவமனை, CBD, பல்பொருள் அங்காடிகள், ஷாப்பிங் சென்டர்கள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் தொற்று பரவலுக்கான வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தீவிர சிகிச்சை, மகப்பேறு மற்றும் சிறப்பு பராமரிப்பு நர்சரி, புற்றுநோய் […]

பொழுதுபோக்கு

Kalki 2898 AD – படத்திலிருந்து தீபிகா படுகோன் அதிரடியாக நீக்கம்…

  • September 18, 2025
  • 0 Comments

‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி இப்படம் வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். மகாபாரத யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். வெளியான முதல் நாளிலேயே ரூ.180 கோடி வசூலுடன் ஆட்டத்தைத் தொடங்கிய ‘கல்கி 2898 ஏடி’ […]

ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் வீடுகளுக்கு அனுப்பப்படும் பார்சல்கள் – அடுத்து நடக்கும் ஆபத்து!

  • September 18, 2025
  • 0 Comments

பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் திட்டமிட்டு தீவைக்கும் சம்பவங்களில்  சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ரஷ்ய வலையமைப்புடன் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக லிதுவேனிய வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர். வில்னியஸில் உள்ள வழக்கறிஞர் ஜெனரல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் சந்தேக நபர்கள் கூரியர் சேவையை பயன்படுத்தி மேற்படி தாக்குதல் சம்பவங்களை திட்டமிட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் மூலம் வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்கள் கொண்ட சாதனங்கள் பார்சல்களாக அனுப்பிவைக்கப்படுகின்றன. அவற்றில் நேரம் பொருத்தப்பட்டுள்ளது. அவை குறிப்பிட்ட நேரம் முடிவடைந்ததுடன் தானாகவே வெடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. […]

error: Content is protected !!