மத்திய கிழக்கு

இஸ்ரேலிய பிணைக்கைதிகள் மூவரை விடுவித்த ஹமாஸ்

காஸாவில் இரு இஸ்‌ரேலியப் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு சனிக்கிழமையன்று (பிப்ரவரி 1) விடுவித்தது.யார்டென் பிபாஸ், ஒஃபெர் கெல்டரோன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

அமெரிக்க இஸ்‌ரேலியரான கீத் சீகல் விரைவில் விடுவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுவிக்கப்பட்ட கெல்டரோன் பிரான்ஸ் மற்றும் இஸ்‌ரேலியக் குடியுரிமை பெற்றவர்.அவரையும் பிபாசையும் காஸாவின் தென்பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகரில் செஞ்சிலுவை அதிகாரியிடம் ஹமாஸ் அமைப்பினர் ஒப்படைத்ததாக இஸ்‌ரேலிய ராணுவம் கூறியது.சீகல் அதே நாளன்று காஸா நகர் துறைமுகத்தில் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹமாஸ் அமைப்பினர் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் திகதியன்று இஸ்‌ரேல் மீது தாக்குதல் நடத்தி பலரைப் பிடித்துச் சென்று பிணைக்கைதிகளாக வைத்திருந்தனர்.

பிணைக்கைதிகளில் ஆக இளையர்களான ஒன்பது மாத குழந்தையான கிஃபிர், நான்கு வயது ஏரியல் ஆகியோரின் தந்தை, பிப்ரவரி 1ல் விடுவிக்கப்பட்ட பிபாஸ் ஆவார்.

பிபாசின் இரண்டு பிள்ளைகளும் அவரது மனைவியுமான ஷிரியும் இஸ்‌ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்ததாக 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஹமாஸ் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், 182 பாலஸ்தீனக் கைதிகளை இஸ்‌ரேல் விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஹமாஸ் கூறியது.

போர் நிறுத்த உடன்படிக்கையின் முதல் கட்டமாக 33 பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.அவர்களில் 17 பேர் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.இதுவரை 400 பாலஸ்தீனக் கைதிகளை இஸ்‌ரேல் விடுவித்துள்ளது.

Mithu

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.