இலங்கை செய்தி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவின் தகவலுக்கமைய மேலதிக விசாரணைகள்

 

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கிய வாக்குமூலத்தின் பிரகாரம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டால் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்கோர்ன் இன்று கண்டிக்கு வருகை தந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைது செய்யுமாறு சில அரசியல்வாதிகள் மற்றும் சிவில் அமைப்புகளால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் பொலிஸ் மா அதிபரிடம் கேட்டறிந்தனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை