ஐரோப்பா

சுவிட்சர்லாந்தில் நிலச்சரிவில் சிக்கி நால்வர் பலி மற்றும் இருவர் மாயம்!

சுவிட்சர்லாந்து நாட்டின் தெற்கே மேகியா பள்ளத்தாக்கு பகுதியில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, பல இடங்களில் நில சரிவு சம்பவங்களும் ஏற்பட்டன.

இதில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டு, அடையாளம் காணப்பட்டு உள்ளன. இந்நிலையில், அந்நாட்டின் வலாய்ஸ் கேன்டன் காவல் துறை வெளியிட்ட செய்தியில், பின் என்ற கிராமத்தில் 52 வயது நபர் ஒருவர் காணாமல் போயுள்ளார் என தெரிய வந்தது.

இதுபற்றிய விசாரணையில், சாஸ்-கிரண்ட் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் அந்த நபர் உயிரிழந்து கிடக்கிறார் என தெரிய வந்தது என தெரிவித்தனர். இதுதவிர லாவிஜாரா பகுதியில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

வலாய்ஸ் கேன்டன் பகுதியில் மற்றொரு நபர் காணாமல் போயுள்ளார். இதனால், மொத்தம் 2 பேர் காணாமல் போயுள்ளனர்.

அண்டை நாடான இத்தாலியிலும், வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். காக்னி பகுதியில் இருந்து 200 பேரும், ஆல்பைன் கிராமத்தில் இருந்து 120 பேரும் மீட்கப்பட்டு உள்ளனர்.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்