ஆஸ்திரேலியா

தற்காப்பிற்காக 4.7 பில்லியன் பெறுமதியான அமெரிக்க ஏவுகணைகளை வாங்கவுள்ள ஆஸ்திரேலியா

அமெரிக்காவிடமிருந்து அதிநவீன ஏவுகணைகளை வாங்க இருப்பதாக அக்டோபர் 22ஆம் திகதியன்று ஆஸ்திரேலியா அறிவித்தது.

ஆசிய பசிபிக் வட்டாரத்தில் அதிகரித்து வரும் பதற்றநிலையை முன்னிட்டு, தனது கடற்படைக்காக இந்த ஏவுகணைகளை ஆஸ்திரேலியா வாங்குகிறது.

இதற்காக $4.7 பில்லியன் ஆஸ்திரேலியன் டொலர் பெறுமானமுள்ள ஒப்பந்தத்தில் அது கையெழுத்திட்டுள்ளது.

சீனாவின் ஆதிக்க மனப்பான்மையை எதிர்கொள்ள இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, மிகவும் குழப்பமான புவிசார்ந்த சூழலை ஆஸ்திரேலியா எதிர்நோக்குவதாக ஆஸ்திரேலியாவின் தற்காப்புத் தொழில், ஆற்றல் விநியோக அமைச்சர் பேட் கொன்ரோய் கூறினார்.அவர் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

Mithu

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித