இலங்கை செய்தி

எம்.பி குணதிலக ராஜபக்ச மீதான தாக்குதல் – வாக்குமூலம் பதிவு செய்த பொலிஸார்

நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ மீதான தாக்குதல் தொடர்பில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் கோட்டை பொலிஸ் அதிகாரிகள் குழு நாடாளுமன்ற வளாகத்திற்குச் சென்று வாக்குமூலங்களைப் பதிவுசெய்துள்ளனர்.

மேற்படி தாக்குதல் சம்பவத்தின் போது அருகில் நின்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பின்வரும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் குழுக் கூட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குணதிலக ராஜபக்ஷவை தாக்கியதாக அவரது மகன் நிலுபுல் ராஜபக்ச கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் குணதிலக்க ராஜபக்ஷ எம்.பியும் கோட்டை பொலிஸ் நிலையத்தில் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த முறைப்பாடுகள் தொடர்பில் கோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை