ஐரோப்பா

ஜெர்மனியில் கண்காட்சியின்போது இடம்பெற்ற விபத்து – குழந்தை உட்பட 19 பேர் படுகாயம்!

ஜெர்மனியின் மேற்கு நகரமான டுசெல்டார்ஃபில் உள்ள ஒரு கண்காட்சியில் வாணவேடிக்கை நிகழ்ச்சியின்னபோது இடம்பெற்ற விபத்தில் குறைந்தது 19 பேர் காயமடைந்ததாகவும், அதில் நான்கு பேர் படுகாயமடைந்ததாகவும்  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரைன் நதிக்கரையோரத்தில் உள்ள ரைன்கிர்ம்ஸ் நிகழ்வில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு தீயணைப்புப் படை மற்றும் அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளன.

காயமடைந்தவர்களில் ஒரு குழந்தையும் அடங்குவதாக DPA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருவதாக டுசெல்டார்ஃப் தீயணைப்பு சேவைகள் தெரிவித்தன.

10 நாள் இடம்பெறும் இந்த  கண்காட்சியை காண ஏராளமான மக்கள் வருகை தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்