இலங்கை

O/L பரீட்சை முடிந்து வீடு திரும்பிய மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி : இலங்கையில் சம்பவம்!

இலங்கையில் பொதுப் பரீட்சை முடித்து வீடு திரும்பிய மாணவி ஒருவர் விபத்தில் சிக்கி படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

பாலாங்கொடை வெலிகேபொல பகுதியில் இன்று (11.05) இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

எதிர்திசையில் பயணித்த டிப்பர் பாரவூர்தியின் இரும்புக் குழாய்கள் சில பேருந்துக்குள் வீசப்பட்ட நிலையில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் பேருந்தில் இருந்த மாணவி ஒருவரின் கழுத்து மற்றும் முகத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி பலாங்கொடை அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி மாகாண வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டிப்பர் சாரதியின் கவனயீனமான வாகனம் மற்றும் ஆபத்தான முறையில் பொருட்களை ஏற்றிச் சென்றமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் பஸ் மற்றும் டிப்பர் வாகனத்தின் சாரதிகள் இருவர் பலாங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்