இலங்கை செய்தி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெருந்தொகை தங்க பிஸ்கட்கள்

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 16 தங்க பிஸ்கட்டுகளை சுங்க கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

அந்த தங்க பிஸ்கட்டுகளின் பெறுமதி சுமார் நான்கு கோடியே நாற்பது இலட்சம் என சுங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று காலை காலியை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இந்த தங்க பிஸ்கட்டுகளை கொண்டு வந்துள்ளார்.

இந்த தங்க பிஸ்கட்களை தலா 08 பொட்டலங்களாக 02 பொட்டலங்களாக தயார் செய்து தான் கொண்டு வந்திருந்த பக்கவாட்டு பையில் வைத்து விமான நிலைய லக்கேஜ் டிராலியின் கீழ் வைத்து விமான நிலையத்தை விட்டு வெளியேற ஆயத்தமானார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை