ஐரோப்பா செய்தி

உயர் திறன் வாய்ந்த தொழிலாளர்களுக்கு பிரான்ஸ் வழங்கும் புதிய விசா

வெளிநாட்டவர்கள் பிரான்சில் பணி செய்யும் வகையில், France Talent Passport என்னும் நீண்ட கால குடியிருப்பு அனுமதி ஒன்றை வழங்க அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

France Talent Passport என்றால் என்ன?

France Talent Passport என்பது, பிரான்சின் பொருளாதார முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, வெளிநாட்டுப் பணியாளர்கள் மற்றும் சுயதொழில் செய்வோருக்கு பிரான்ஸ் அரசு வழங்கும் ஒரு நீண்ட கால குடியிருப்பு அனுமதியாகும்.

இதன் மூலம் நான்கு ஆண்டுகளுக்கு பிரான்சில் வாழவும், பணி செய்யவும் முடியும். அத்துடன், உங்களுடன் உங்கள் குடும்பத்தினரும் பிரான்ஸ் வரலாம். அவர்களுக்கும் கணவன் அல்லது மனைவிக்கான நீண்ட கால குடியிருப்பு அனுமதி வழங்கப்படும்.

France Talent Passport யார் யாருக்கு?

இந்த அனுமதி, பிரான்சின் பொருளாதாரத்துக்கு பங்களிக்கும் தகுதி பெற்ற நபர்களுக்கானதாகும். இந்த சிறப்பு அனுமதியைப் பெறுவதற்கு, கீழ்க்கண்ட தகுதிகள் தேவையாக உள்ளது.

  • ஒரு புதுமையான விடயங்களை உருவாகும், புதுமைக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக்கொள்ளும் நிறுவனத்தால் பணிக்கு அழைக்கப்பட்டவராக இருக்கவேண்டும்,
  • அவரது பணி, திறன்மிகுப் பணியாக இருக்கவேண்டும்,
  • ஒரு ஏஜன்சியால் பணிக்கமர்த்தப்பட்ட பணியாளர்,
  • ஆராய்ச்சியாளர்,
  • ஒரு நிறுவனத்தை உருவாக்குபவர்,
  • பொதுத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட புதுமையான திட்டம்,
  • முதலீட்டாளர்,
  • Social agent,
  • கலை மற்றும் கலாச்சாரத் தொழில்,
  • சர்வதேச அளவில் புகழ் பெற்றவர்,

என்னும் இந்த தகுதிநிலைகள் France Talent Passport பெற தேவையானவையாகும்.

(Visited 2 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி