இந்தியா

கர்நாடகாவில் பயங்கரம்… பள்ளி ஆசிரியர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!

தும்கூர் மாவட்டம், குனிகல் தாலுகாவில் ஆசிரியர் ஒருவர் இன்று கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாவட்டம், தும்கூர் மாவட்டம், குனிகல் தாலுகா குல்லி நஞ்சய்யன்பாளையத்தைச் சேர்ந்தவர் மாரியப்பா(47). இவர் மோதூர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இன்று வீட்டில் இருந்து பள்ளிக்குக் கிளம்பிச் சென்றுள்ளார். இந்த நிலையில், குல்லி நஞ்சய்யன்பாளையத்தில் பண்ணையில் மாரியப்பாவின் உடல் வெட்டுக் காயங்களுடன் கிடந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் குனிகல் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். ஏஎஸ்பி மாரியப்பா, குனிகல் டிஎஸ்பி ஓம்பிரகாஷ், இன்ஸ்பெக்டர் நவீன் கவுடா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

குனிகல் காவல் நிலையம்

அப்போது மாரியப்பாவின் தலை மற்றும் தோள்பட்டையில் பல முறை ஆயுதங்களால் வெட்டப்பட்டிருந்த காயங்கள் இருந்தன. அத்துடன் ஓட ஓட விரட்டி அவர் கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இந்த கொலை குறித்த செய்தி அறிந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பண்ணையைச் சுற்றித் திரண்டனர்.

தனிப்பட்ட விரோதத்தின் பின்னணியில் இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து குனிகல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாரியப்பாவுடன் கிராமத்தில் யாருக்கும் விரோதமிருக்கிறதா என்று பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பள்ளி ஆசிரியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே