பிரான்சில் அதி உச்ச பாதுகாப்பிற்கு மத்தியில் முந்நூறுக்கும் மேற்பட்டோர் கைது!
பிரான்சில் புதுவருட கொண்டாட்டங்களின்போது கலகத்தில் ஈடுபட்ட 380 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவருடத்தை முன்னிட்டி பிரான்சில் 90000 பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உச்சக்கட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் சிறிய அளவிலான வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட முந்நூறுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டில் கைது செய்யப்பட்டவர்களை விட குறைவாகும்.
முந்தைய சில ஆண்டுகளை விட மிக குறைந்த அளவு வன்முறைச் சம்பவங்களே பதிவாகியுள்ளதாக உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மனின் தெரிவித்துள்ளார்.
(Visited 5 times, 1 visits today)