பொழுதுபோக்கு

திரைப்படமாகும் சில்க் ஸ்மிதாவின் கதை… அசத்தல் போஸ்டர் வெளியீடு!

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் சில்க்காக சிம்மாசனமிட்டு அமர்ந்த சில்க் ஸ்மிதா இறந்து 27 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்று அவருடைய 63வது பிறந்தநாளில் அவரது பயோபிக் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் எண்பதுகளின் காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் கவர்ச்சி புயலாக மையம் கொண்டவர் சில்க் ஸ்மிதா. விஜயலட்சுமி எனும் இயற்பெயர் கொண்ட இவர் தமிழில் ‘வண்டிச்சக்கரம்’ படம் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் அவரது பெயர் சில்க். அதுவே அவருக்கு பின்னாளில் பெயராக நிலைத்து போனது. 18 வருட சினிமா வாழ்க்கையில் கிட்டத்தட்ட 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். படம் ஓட சில்க் பாடலும் வேண்டும் என திரையுலகம் அவர் கால்ஷீட்டிற்காக காத்திருந்ததும் அவரது நடனத்தைப் பார்க்கவே திரையரங்குகளில் ரசிகர்கள் கூடியதும் உண்டு. இந்த நிலையில் அவரது பயோபிக் குறித்தான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளிலும் இந்தப் படம் உருவாகிறது. ஆஸ்திரேலிய நடிகையான சந்திரிகா ரவி, சில்க் ஸ்மிதாவாக நடிக்கிறார். இவர் இதற்கு முன்பு ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘செய்’ போன்ற படங்களில் நடித்தவர். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஜெயராம் இயக்குகிறார். அடுத்த வருடம் இந்தப் படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது. முன்னதாக சில்க் ஸ்மிதாவின் கதையைக் கொண்டு வித்யாபாலன் நடிப்பில் ‘டர்ட்டி பிக்சர்’ படமும், மலையாளத்தில் ‘கிளைமாக்ஸ்’ என்ற படமும் வந்தது.

(Visited 8 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content