இலங்கையில் அனைத்து வகை வாகனங்களையும் இறக்குமதி செய்ய அனுமதிக்க யோசனை!
இலங்கையில் அனைத்து வகை வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கான கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
உரிய கொள்கைளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதன் பின்னர், வாகன இறக்குமதி தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்த அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அண்மையில் வாகனம் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
(Visited 16 times, 1 visits today)