இலங்கை

கஞ்சா பயிரிடுவதை சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை!

கஞ்சாவை மருத்துவ மூலிகையாக பயிரிடுவதை சட்டப்பூர்வமாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும் என சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

கஞ்சாவை மருத்துவ மூலிகையாக பயிரிட அனுமதி வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரவு செலவுத் திட்ட முன்மொழிவை முன்வைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நேற்று (05.09) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஆயுர்வேத மூலிகைகளை மூலப்பொருளாக ஏற்றுமதி செய்வதை 2027ஆம் ஆண்டிற்குப் பிறகு தடை செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும், இது இலங்கையின் உள்நாட்டு மற்றும் ஆயுர்வேத நடைமுறைகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் கூறினார்.

“மருத்துவ மூலிகைகளை மருந்துகளாக மட்டுமே ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது எனக் கூறிய அவர், மருத்துவப் பயிர்களை வணிகப் பயிர்களாகப் பயிரிடாததால், நமது பழங்குடி மற்றும் ஆயுர்வேத நடைமுறைகளுக்கு இது நெருக்கடியை ஏற்படுத்தும்” என சுட்டிக்காட்டினார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!