பொழுதுபோக்கு

அமெரிக்காவில் நடிகர் விஜய்… வெங்கட் பிரபு ட்வீட்…

‘தளபதி 68’ படத்திற்காக அமெரிக்காவில் உள்ள கிரியேட்டிவ் ஸ்டுடியோ ஒன்றில் நடிகர் விஜய் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகின்றது.

‘லியோ’ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார். ‘தளபதி 68’ என அழைக்கப்படும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

thalapathy 68

இந்த படத்தில் அப்பா – மகன் என்று இரண்டு மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார். இதுதவிர ஜெய், பிரபுதேவா, மாதவன், அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

thalapathy 68

தற்போது இந்த படத்தின் பணிகளுக்காக நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றுள்ளனர்.

அங்கு பிரபல கிரியேட்டிவ் ஸ்டுடியோ ஒன்றில் ‘தளபதி 68’ பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக கிரியேட்டிவ் டெக்னாலஜி ஸ்டுடியோவிற்கு நடிகர் விஜய் சென்றுள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

See also  ரெடியாகும் ஜெய்லர் - 2... நெல்சனுக்கு அடித்த அதிஷ்டம்

முதல்முறையாக இந்திய சினிமாவில் இந்த தொழில்நுட்பம் ‘தளபதி 68’ படத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முன்னர் ஷாருக்கானின் ஃபேன், கமலின் ‘இந்தியன் 2’ படங்களில் இதுபோன்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், இந்த படத்திற்காக அட்வான்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்துகிறது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள வெங்கட் பிரபு, ‘எதிர்கால உலகத்திற்கு வருக’ என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு கவனம் ஈர்த்துள்ளது.

 

(Visited 8 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content