இலங்கை

போதை பொருளை சூட்சமான முறையில் விற்பனை செய்த சந்தேக நபர் கைது!

திருகோணமலை- விஜிதபுர பகுதியில் கஞ்சா போதை பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த சந்தேக நபரை சோதனையிட்ட போது அவரிடமிருந்து ஒரு தொகை கஞ்சா போதை பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (09) இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை- விஜிதபுர பகுதியைச் சேர்ந்த
40 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்ச்சியாக குறித்த சந்தேக நபர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்த போதிலும் சூழ்ச்சிகரமான முறையில் விற்பனை செய்து வருகின்றமை தெரிய வந்துள்ளது.

குறித்த சந்தேக நபர் பல்வேறு குற்ற செயல்களுடன் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!