இந்தியா விளையாட்டு

500வது சர்வதேச போட்டியில் விளையாடும் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இன்று தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் கோலிக்கு அது 500-வது சர்வதேச போட்டியாகும்.

அவர் இதுவரை 110 டெஸ்ட், 274 ஒரு நாள் போட்டி மற்றும் 115 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

500-வது சர்வதேச போட்டியில் விளையாடும் 4-வது இந்திய வீரர் கோலி ஆவார். ஒட்டுமொத்தமாக 10-வது வீரராக உள்ளார்.

கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் 664 போட்டிகளில் விளையாடி உள்ளார். டோனி 538 போட்டிகளிலும், ராகுல் டிராவிட் 509 போட்டிகளிலும் விளையாடி உள்ளனர்.

கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களில் கோலி 100-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

500-வது சர்வதேச போட்டியில் விளையாடும் கோலிக்கு இந்நாள், முன்னாள் வீரர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

KP

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே