இலங்கை

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

கொழும்பின் பல பகுதிகளில் 14 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி சனிக்கிழமை இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாளிகாகந்த மற்றும் எலிஹவுஸ் நீர்ப்பம்பி நிலையங்களுக்காக மின் விநியோகக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

சனிக்கிழமை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரையான 14 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 01 முதல் 04 வரையான பகுதிகள் மற்றும் கொழும்பு 07 முதல் 15 வரையான பகுதிகளிலேயே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனால் குறித்த பகுதியிலுள்ள மக்கள் நீரை சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்