நடிகர் ராமராஜனின் மேக்கப்.. அந்த ஊசியால் தான் இப்படி… உண்மையை உடைத்த நளினி
நடிகை நளினி பல முன்னணி நடிகர்களோடு கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த இவர் தற்போது உடல் எடை அதிகமாகி இருக்கிறார். அது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார். அதுபோல தான் உடல் எடை கூடியதற்கு காரணம் தன்னுடைய மகன் சொன்ன வார்த்தைதான். அதனால் தான் நான் இப்படி ஆனேன் என்றும் கூறி இருக்கிறார்.
அதோடு நடிகை நளினி ராமராஜனை பிரிந்து இருந்தாலும் அவர் பற்றிய சில ரகசியங்களையும் பகிர்ந்து இருக்கிறார்.
பல வருடங்களுக்கு முன்பு வெள்ளி திரையில் ஒன்றாக நடித்து, காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் நடிகை நளினி மற்றும் ராமராஜன். ஆரம்பத்தில் நளினிக்கு அதிகமான திரைப்படங்களில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருந்தது. அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவராக இருந்து வந்தார்.
அப்போதுதான் நடிகர் ராமராஜன் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க தொடங்கியிருந்தார். ராமராஜன் நடித்த திரைப்படங்கள் கிராமப்புறங்களை சார்ந்ததாக இருந்தாலும் இதுவும் அவருக்கு பெரிய அளவில் ஹிட் கொடுக்க தொடங்கியிருந்தது.
நளினி முன்னணி நடிகையாக இருந்தாலும் ராமராஜன் தொடக்கப் புள்ளியில் இருந்த நேரத்தில் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு பின்பு இருவருடைய வீட்டையும் எதிர்த்து திருமணமும் செய்து கொண்டனர். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களுடைய வாழ்க்கையில் இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு சில வருடங்கள் கழித்து சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்தனர்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய குடும்ப வாழ்க்கை மற்றும் திரை வாழ்க்கை குறிப்பு பேசிக் கொண்டிருந்தார். அப்போது நான் இந்த அளவிற்கு குண்டாகி இருப்பதற்கு காரணம் என்னுடைய மகன்தான்.
அவன் தான் ஒருமுறை என்கிட்ட சொன்னான். நீங்க சினிமாவில் கதாநாயகியாக இருக்கலாம் ஆனால் நிஜத்தில் என்னுடைய அம்மா. ஒரு அம்மா எப்படி இருப்பாங்களோ அந்த மாதிரி நீங்க இருங்க எனக்கு அப்படித்தான் பிடிக்கும் என்று சொன்னான்.
அவனுக்காகத்தான் நான் ஸ்டீராய்டு ஊசி போட்டு என்னுடைய உடல் எடையை கூட்டினேன். அதுபோல நான் கதாநாயகி அதனால் சாப்பாடு கஞ்சத்தனம் எல்லாம் காட்ட மாட்டேன். எனக்கு பிடித்ததை வகைவகையாக சாப்பிடுவது தான் வழக்கம்.
எங்க வீட்டில் பெரிய வாழை இலையில் கல்யாண வீட்டு சாப்பாடு போல எல்லா வகையான கூட்டு பொரியல் குழம்பு என பலவற்றை வைத்து நான் வெளுத்து கட்டுவது என்னுடைய வாடிக்கை. நான் குண்டாக இருக்கிறேனே என்று எப்போதும் வருத்தப்பட்டது கிடையாது என்று சிரித்தபடியே கூறியிருக்கிறார்.
அதோடு அந்த பேட்டியில் நடிகர் ராமராஜன் அதிகமாக மேக்கப் போடுகிறார் என்று இப்போது பலர் கிண்டல் செய்கிறார்களே, நீங்கள் அவருடைய மேக்கப் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம் என்று அவரிடம் எப்பவாவது சொல்லி இருக்கீங்களா என்று கேட்கப்பட்டது.
அதற்கு கண்டிப்பா கிடையாது. நான் எப்போதுமே அவருடைய நடிப்பில் தலையிட்டதே கிடையாது. என் புருஷன் அப்போ முன்னணி நடிகராக இருந்தாரு. அதனால அந்த நேரத்துல யாருமே இப்படி கிண்டல் எல்லாம் பண்ணுனது கிடையாது என்று கூறியிருக்கிறார்.