இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!
இந்தோனேசியாவின் சுலாவேசி தீவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் 6.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக இந்தோனேசியாவின் புவி இயற்பியல் நிறுவனமான BMKG தெரிவித்துள்ளது.
மேற்படி நிலநடுக்கமானது பாலு நகருக்குத் தென்கிழக்கே சுமார் 42 கிலோமீட்டர் (26.1 மைல்கள்) தொலைவில், 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் வெளியாகாத நிலையில் மதிப்பீடு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





