ஐரோப்பா செய்தி

நடத்தை மாறினால் மட்டுமே ஈரான் மீதான தடை நீங்கும்: EU அறிவிப்பு!

ஈரானின் நடவடிக்கைகளில் உண்மையான மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே தற்போதைய கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து சிந்திக்க முடியும் என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான தடைகளை நீக்குவதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அணுகுமுறை என்னவாக இருக்கும் என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“களத்தில் ஒரு உண்மையான மற்றும் சாதகமான மாற்றம் ஏற்படும் போது மட்டுமே, அந்தத் தடைகளை நீக்குவது குறித்து நாம் சிந்திக்க முடியும்.

ஈரானின் செயல்பாடுகள் நம்பகமான முறையிலும், சர்வதேச அளவில் சரிபார்க்கக்கூடிய வகையிலும் மாறினால் மட்டுமே தடைகளை நீக்க முடியும்.

மனித உரிமைகளை ஈரான் நிலைநாட்ட வேண்டும். பேரழிவு தரும் அணு ஆயுத முயற்சி கைவிடப்பட வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen தெளிவுபடுத்தியுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி