ஐரோப்பா

ஸ்டாமரின் சொத்துக்களுக்கு தீவைப்பு!! குற்றவாளிகள் பொலிஸ் காவலில்!

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமரின் வீடு மற்றும் கார் உள்ளிட்ட சொத்துக்களுக்கு தீவைத்த ரோமன் லவ்ரினோவிச் (Roman Lavrynovych) மற்றும் ஸ்டானிஸ்லாவ் கார்பியூக் (Stanislav Carpiuc) ஆகிய இருவரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவருக்கும் வரும் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் அதுவரை  பொலிஸ் காவலில் வைக்கப்படுவார்கள் என ஓல்ட் பெய்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவங்கள், ‘எல் மனி’ என்று அறியப்பட்ட, ரஷ்ய மொழி பேசும் நபர் ஒருவரால்  திட்டமிடப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேற்படி தீவைப்பு சம்பவத்திற்காக ரஷ்ய நபர் லவ்ரினோவிச்சிற்கு 3000 பவுண்ட்ஸ்களை கிரிப்டோகரன்சியாக  வழங்கியதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த லண்டன் பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் ‘அரச அச்சுறுத்தல்’ இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்