இலங்கை

உள்ளுராட்சி ஆணையாளராக றாபியை நியமித்த கிழக்கு ஆளுநர்!!

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர அதிகாரியான ஏ.ரி.எம். றாபியை கிழக்கு மாகாண ஆளுநர் நியமித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் இன்று  (15) இந்த நியமனம்
வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025 ஜனவரி 01 முதல் கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக கடமையாற்றி வந்த நிலையில் அவருக்கு இப்பதவி உயர்வு கிடைக்கப் பெற்றுள்ளது.

அதற்கு முன்னதாக அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளராகவும் அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆணையாளராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.

உள்ளூராட்சி நிர்வாகத்துறையில் நீண்ட கால அனுபவமும் ஆற்றலும் நிறைந்த ஏ.ரி.எம். றாபி, அத்துறையின் மாகாண ஆணை@யாளராக நியமிக்கப்பட்டிருப்பதானது மாகாண உள்ளுராட்சி நிர்வாகம் மற்றும் சேவைகளுக்கு கிடைத்திருக்கின்ற பெரும் வரப்பிரசாதமாக நோக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்