உலகம்

ஈரான் – அமெரிக்கா இடையில் இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தம்!! முற்றுகையை நீக்கும் அமெரிக்கா!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) இறுதி செய்யப்பட்டு, வரும் வெள்ளிக்கிழமை அன்று அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடப்படும் என்று ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் இன்று அதிகாலை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான முறையான கையெழுத்திடும் விழா சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒப்பந்தத்திற்கு அமைய அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் ஈரானுக்கு எதிரான அமெரிக்க கடற்படை முற்றுகை நீக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், ராஜதந்திரத்தின் விளைவு மட்டுமல்ல, போரின் போது ஈரான் அடைந்த இராணுவ சாதனைகளின் விளைவுமாகும் என்று துணை வெளியுறவு அமைச்சர் கரிபாபாடி விவரித்துள்ளார்.

ஈரான் தனது அனைத்து முக்கிய நிலைப்பாடுகளையும் வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சேர்த்துள்ளதாகவும், அதிகாரப்பூர்வ கையெழுத்திடலுக்குப் பிறகு முழு உரை வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்