துருக்கியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி!
2026 FIFA உலகக்கிண்ண கால்பந்து தொடரில் குரூப் D பிரிவில் துருக்கு மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிப்பெற்றுள்ளது.
இந்த போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் 27-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவுக்காக நெஸ்டரி இரான்குண்டா (Nestory Irankunda) முதல் கோலை அடித்தார்.
பின்னர், 75-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது கோலை அடித்தது.
அதன்படி, ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கோல் கணக்கில் போட்டியை வென்றது.
இந்த வெற்றியின் மூலம், குரூப் D-யின் புள்ளி அட்டவணையில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது, அதே நேரத்தில் அமெரிக்க அணி முதல் இடத்தில் உள்ளது.




