ஐரோப்பா

பிரித்தானியாவில் 14 வயது சிறுமி மீது கொலைகுற்றச்சாட்டு!! நீதிமன்றத்தில் முன்னிலை!

மென்செஸ்டரில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற கத்திகுத்து தாக்குதலுடன் தொடர்புடைய 14 வயது சிறுமி  இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் காணொளி காட்சி மூலம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது ​​அவர் மூன்று கொலை முயற்சி குற்றச்சாட்டுகளையும், பாடசாலை வளாகத்தில் கூர்மையான ஆயுதத்தை வைத்திருந்த இரண்டு குற்றச்சாட்டுகளையும்  எதிர்கொண்டார்.

வழக்கை விசாரணை செய்த நீதிபதி குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மை காரணமாக, கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கமைய அடுத்த விசாரணை ஜுன் 19 அன்று ஓல்ட் பெய்லியில் இடம்பெறவுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்