அரசியல் இலங்கை செய்தி

தெற்கு அரசியலில் பரபரப்பு: பிக்குகளை நாடும் எதிரணி!

நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் மகாநாயக்க தேரர்களிடம் முறையிடுவதற்கு கூட்டு எதிரணி தீர்மானித்துள்ளது.

கூட்டு எதிரணியின் விசேட கூட்டமொன்று கொழும்பில் நடைபெற்றது.

இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைப் பிரதிநிதியையும் சந்தித்து பேச்சு நடத்துவதற்கு கூட்டு எதிரணி திட்டமிட்டுள்ளது.

“ சர்வதேச நாணய நிதியத்தின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்கும் நிலைப்பாட்டிலேயே இந்த அரசாங்கம் இருக்கின்றது.

இதனால் எமது மக்களுக்கு ஏற்படும் நெருக்கடி தொடர்பில் இதன்போது தெளிவுபடுத்தப்படும்.” என்று கூட்டு எதிரணி உறுப்பினர் சுகீஸ்வர பண்டார தெரிவித்தார்.

எதிரணிகளை ஒடுக்கும் வகையிலேயே நாட்டின் சட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்துகின்றது.

ஆளுங்கட்சிக்கு எதிராக சட்டம் செயல்படுவதில்லை. அரசாங்கத்துக்கு தேவையான வகையிலேயே பொலிஸ்மா அதிபர் செயல்படுகின்றார் எனவும் அவர் கூறினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை