உலகம் செய்தி

இஸ்ரேல் பிரதமர் சர்வாதிகாரி: துருக்கி ஜனாதிபதி சாட்டையடி!

இஸ்ரேல் பிரதமர் ஒரு சர்வாதிகாரி என்று துருக்கி ஜனாதிபதி Recep Tayyip Erdogan சொற்கணை தொடுத்துள்ளார்.

இதற்கு பதிலடியாக எர்டோகனை யூத விரோதி என நெதன்யாகு விமர்சித்துள்ளார்.

லெபனான் மற்றும் சிரியாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகள் தனது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று துருக்கி கருதுகிறது.

இருப்பினும், தனது நாட்டின் பாதுகாப்பு நலன்களுக்காக எங்கு வேண்டுமானாலும் இராணுவத் தாக்குதல் நடத்தத் தயார் என இஸ்ரேல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாகத் தொடரும் இந்த அரசியல் பகை தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

இத்தகைய பரஸ்பர குற்றச்சாட்டுகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி