இலங்கை

திரைப்படப் பாணியில் போதைப்பொருள் கடத்தல் – சாரதி திடீர் மரணம்!

வயிற்றுக்குள் மறைத்து வைத்து ‘ஐஸ்’ போதைப்பொருளைக் கடத்திச் சென்ற சொகுசு பேருந்தின்  சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த போதைப்பொருள்  வயிற்றினுள்ளேயே வெடித்து விஷமாகியதால்  அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கைககள் தெரிவிக்கின்றன.

ஓகவெல பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய சாரதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்தள்ளது.

கடந்த 8ஆம் திகதி மாகும்புரவிலிருந்து தங்காலை நோக்கிச் சென்ற பேருந்து, அதன் இலக்கை அடைந்த சில நிமிடங்களிலேயே சாரதி திடீர் சுகவீனமுற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர் தங்காலை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனையில்  உயிரிழந்த நபரின் வயிற்றுக்குள் இருந்து போதைப்பொருள் அடங்கிய இரண்டு பாக்கெட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

வயிற்றிலிருந்த அந்த இரண்டு போதைப்பொருள் பாக்கெட்டுகளில் ஒன்று உடைந்ததால், மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இவ்வாறு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோரை இனங்காண பொலிஸார் விசேட நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்