பிலிப்பைன்ஸில் 2,100இற்கும் மேற்பட்ட பின் அதிர்வுகள் பதிவு – 17 பேர் மாயம்!
பிலிப்பைன்ஸில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.
7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியதை தொடர்ந்து 2,100-க்கும் மேற்பட்ட பின் அதிர்வுகள் பதிவாகி பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்காரணமாக 600இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் 17 பேர் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 32,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். அதேபோல் 3,100-க்கும் மேற்பட்ட வீடுகள், சாலைகள், பாலங்கள் மற்றும் 100 அரசு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பின் அதிர்வுகளால் மேலும் கட்டிடங்கள் இடிந்து விழக்கூடும் என எச்சரித்துள்ள அதிகாரிகள், பாடசாலைகளை மீளவும் திறக்கும் முன் முழுமையான ஆய்வுகளை மேற்கொள்ளுமாற பணித்துள்ளனர்.




