பொருளாதாரத்தை முடக்க திட்டம் : செயின்ட் பீட்டர்ஸ்பர்கின் முக்கிய இடங்களில் உக்ரைன் தாக்குதல்!
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற டாவோஸ் பொருளாதார மாநாட்டின் இறுதி நாளில் உக்ரைன் முன்னெப்போதும் இல்லாத தாக்குதல்களை நடத்தியுள்ளது.
உக்ரைன் துருப்புகள் அப்பகுதியில் ஆளில்லா விமானங்கள் மூலம் ஒரு கடற்படைத் தளம் மற்றும் ரஷ்ய ஆயுதக் கிடங்குகளைத் தாக்கியதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரைச் சுற்றியுள்ள லெனின்கிராட் பகுதிக்கு மேல் 140 இற்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பிராந்திய ஆளுநர் அலெக்சாண்டர் ட்ரோஸ்டென்கோ (Aleksandr Drozdenko) கூறினார்.
மேலும் தெற்கு கிராஸ்னோடார் பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கு ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஜெலன்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.
தொடர்புடைய செய்தி



