பாலஸ்தீன கொடியை அகற்ற ஸ்லோவேனியாவின் புதிய பிரதமர் உத்தரவு!
மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் புதிய வலதுசாரி அரசாங்கம் பொறுப்பேற்றவுடன், அந்நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையில் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது
முன்னாள் பிரதமர் Robert Golob பாலஸ்தீனத்தை அங்கீகரித்து அந்நாட்டின் கொடியை ஏற்றியிருந்த நிலையில், புதிய பிரதமர் Janez Jansa அதனை அகற்ற உத்தரவிட்டுள்ளார்.
காசா மீதான இஸ்ரேலின் நடவடிக்கைகளை ஸ்லோவேனியா நாட்டின் முந்தைய அரசு கடுமையாக விமர்சித்து ஆயுதத் தடையையும் விதித்திருந்தது.
ஆனால் புதிய பிரதமர் அந்த முடிவுகளை தலைகீழாக மாற்றத் திட்டமிட்டுள்ளார்.
இந்த அரசியல் மாற்றத்தை இஸ்ரேல் வரவேற்றுள்ளதுடன், ஸ்லோவேனியாவின் தலைநகரில் தனது முதல் தூதரகத்தை விரைவில் திறக்கவுள்ளது.
இதன் மூலம் ஸ்லோவேனியா தனது சர்வதேச நிலைப்பாட்டை மாற்றி, இஸ்ரேலுடன் நெருக்கமான உறவை வளர்க்கத் தொடங்கியுள்ளது.





