அரசியல் இலங்கை செய்தி

இனி அரசியலுக்கு வரமாட்டேன்: அலி சப்ரி உறுதி!

தான் இனி ஒருபோதும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, எவ்வளவு கோரிக்கைகள் வந்தாலும் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லையா என கேள்வி எழுப்பட்டது.

“ இல்லை. அரசியலுக்கு வருவதற்கு எதிர்பார்க்கவில்லை.” என அலிசப்ரி பதிலளித்தார்.

அதேவேளை, தான் அமைச்சராக பதவிவகித்த காலப்பகுதியில் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை நாட்டுக்காக முழு அர்ப்பணிப்புடன் நிறைவேற்றியதாகவும் குறித்த நேர்காணலில் அலிசப்ரி குறிப்பிட்டார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியான பின்னர், அலி சப்ரி அரசியலுக்கு வந்தார். அவரது ஆட்சிகாலத்தில் தேசியப் பட்டியல் வழங்கப்பட்டது. அமைச்சு பதவியையும் வகித்தார். பொருளாதார நெருக்கடி ஏற்பட்டவேளை அமைச்சு பதவியை துறந்தார். பின்னர் ரணில் ஆட்சியில் நிதி அமைச்சராக செயல்பட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!