ஸ்பெயின் – பிரபல சுற்றுலாத் தளத்தில் காட்டுத்தீ!! முகாமிடும் படையினர்!
ஸ்பெயினில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தளமான முர்சியாவின் Murcia லாஸ் காரெஸில் (Los Garres) பரவிய காட்டுத்தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து காரணமாக சுமார் 100 குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது இருப்பிடம் திரும்பியுள்ளனர். அத்துடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், இராணுவப் பிரிவுகள், விமானங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உட்பட நூற்றுக்கணக்கான அவசரகாலப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
அதேசமயம் மீளவும் தீ விபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில் 150 பேர் கொண்ட குழுவொன்று அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





